பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வெல்லும். கூகை என்பது கோட்டான்' என்று கூறப்படுவ தாகும். இரண்டு முதல் நான்கு குறட்பா வரை காலத்தின் அருமையினை அறிந்து கொள்ளுவதால் வரும் பயன் கூறப் பட்டது. காலம் தக்கபடி வாராவிட்டால் பொறுத்திருத்தல் வேண்டும் என்பதினை ஐந்தாம் குறட்பா எடுத்துக்காட்டு கிறது. பொறுத்திருப்பதால் வரும் சிறப்பினை ஆறாவது குறட்பா கூறும். இக்குறட்பா ஆட்டுக்கடாவின் சண்டை யினைக் குறிப்பிட்டுக் காட்டுவது மிகச்சிறந்த உண்மையினை வெளிப்படுத்துவதாகும். பொறுத்திருக்கும் காலத்தில் பகைமை வெளிப்படாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்று ஏழு எட்டு குறட் பாக்கள் தெரிவிக்கின்றன. காலம் வந்துவிட்டால் விரைவாக செய்தல் வேண்டும் என்று ஒன்பதாம் பாடல் குறித்துக் காட்டுகிறது. பொறுத்திருப்பதும் செயல்படுவதும் ஆகிய இரண்டினையும் கொக்கினைக் காட்டிப் பத்தாம் பாடல் விளக்குகிறது. இப்பாடல், கொக்கு ஒக்க - குத்துஒக்க என்று கூறி சிறப்பிக்கின்றது. வேந்தர்க்கு வேண்டும் பொழுது, திரு வினைத்தீராமை ஆர்க்கும் கயிறுஅருவினை என்ப உளவோ. -ஞாலம் கருதினும் கைகூடும் - காலம் கருதி இருப்பர் . ஊக்கம் உடையான் ஒடுக்கம் - புறம் வேரார் - செறுநரைக் காணின் சுமக்க - செய்தற்கு அரிய செயல் . குத்து ஒக்க . ஆகிய பத்தும் என்றென்றும் நினைவில் நிறுத்தப்பட்டுக் காலத்தின் அருமையினை அறிதற்கு உதவுவனவாகும். 50. இடன் அறிதல் காலமும் இடமும் அறிந்து பகைமேற் செல்லும் அரசன் வெல்லுவதற்கேற்ற நிலத்தினையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும் சிறப்புற அரசனுக்கும் பொதுப்பட அனைவர்க்