பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 இயல்பினை அறிந்தறிய பலவகையான முறைகளையும் முதற் குறட்பா தெளிவு படுத்துகின்றது. அறத்தினின்று மன்னன் வழுவினான் என்றும், பொருள் வழியில் மன்னன் ஈகையற்றவன் என்றும் இன்பத்தில் - சிற்றின் பத்தில்.மயங்கியவன் என்றும், பிறரைக் கொல்ல அரசன் முயற்சி செய்பவன் என்றும் . இவ்வாறான செய்திகளைக் கூறிஅதற்கு உடன்பட்டு மனம் இசைந்து அரசனை விலக்கு வதற்கு எண்ணம் கொள்பவனாக இருக்கின்றானா என்றெல்லாம் அறிந்து, பிறகே தேர்ந் தெடுக்க வேண்டும் என்று முதல் குறட்பா விளக்கம் தருகின்றது. நற்குடியிற் பிறந்தவர்கள் குடிப் பெருமைக்கு அஞ்சித டப்பார்கள் என்று இரண்டாம் குறட்பா கூறு கின்றது. வினையினது - தொழிலினது மிகப் பெரிய நூல் களைக் கற்று மனம் மாசற்றவர்களாக இருப்பவர்களிடத் திலும் ஆராய்ந்து பார்க்கும்போது அறியாமை இருக்கத் தான் செய்யும் என்று மூன்றாம் குறட்பா தெளிவு படுத்து கிறது. நல்ல குணங்களே ஒருவனிடத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தல் கூடாது. ஆதலால், குணமும் குற்ற மும் நாடி பிறகு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான்காம் பாடல் குறிக்கின்றது. செயலினைக் கொண்டே ஒருவன் . நல்லவன் - கெட்டவன் என்று அமைத்தல் வேண்டும் என்று ஐந்தாம் பாடல் குறிக்கும். - உலகத்தோடு தொடர்பு இல்லாதவர்களையும் சுற்றம்: உறவு ஒன்றும் இல்லாதவர்களையும் தேர்ந்தெடுக்கக் கூடாது. அவர்கள் பழி பாவத்திற்கு நாண மாட்டார்கள். இதனை ஆறாம் பாடல் கூறும். அன்பு காரணமாக தேர்ந் தெடுக்காமல் அறிவின் ஆற்றலின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஏழாம் பாடல் உணர்த்து கின்றது. தேர்ந்தெடுத்த பின் அவர் மீது ஐயங்கொள்ளக் கூடாதென்று பத்தாம் பாடல் கூறும் தலைமையாக