பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 மக்கள் வாழ்க்கையும் இயற்கையின் செயல்களும் மாறுபட்ட வையல்ல - தொடர்புள்ளவைகள்தான் என்பதன்ை ஐந்தாம் பாடல் குறிக்கின்றது. இயற்கையின் நன்மையால் சிறந்த ஆட்சி நடக்கும் நிலத்திற்கு - நாட்டிற்கு - நன்மை கிடைக்கும் என்பது தெளிவாக்கப்பட்டது வேலினையும், கோலினையும் காட்டும் ஆறாவது குறட்பா பத்தாம் பாடல் தண்டிக்கும் முறையினை அருமையாகக் கூறுகின்றது. மன்னனை இறைவன் என்றே கூறிச் சிறப்பிக்கின்றார். அவனைக் காப்பது முறை என்பதாகும். அதுவே செங் கோன்மை எனப்படும். மக்களைத் தழுவி ஆட்சி செய்யும் மன்னன், மாநில மன்னன்' என்று குறிக்கப்பட்டான். 56. கொடுங்கோன்மை முறை கெட்டு நடத்தும் தன்மை என்பதாகும். இது செங்கோன்மைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். முதலிரண்டு பாக்களும் கொடுங்கோன்மையினது குற்றத் தினைக் கூறுகின்றன. மூன்று முதல் ஆறுவரையுள்ள பாடல்கள் கொடுங்கோலன் அடையும் தீமையினையும் குற்றத்தினையும் கூறுகின்றன. ஏழு, எட்டுப் பாடல்கள் கொடுங்கோலன் நாட்டில் வாழும் மக்களுக்கு உண்டாகும்: குற்றத்தினை எடுத்துரைக்கின்றன. கடைசி இரண்டு. பாடல்களும் அவன் நாட்டில் நிகழும் குற்றத்தினைக் குறித் துக் காட்டுகின்றன. கொலை மேற்கொண்டோரின் கொடிதே - கோலொடு: நின்றான் இரவு - கூழும் குடியும் ஒருங்கிழக்கும் . செல்வத், தைத் தேய்க்கும் படை - மன்னாவாம் மன்னர்க்கு ஒளி - அளியின்மை வாழும் உயிர்க்கு - ஒல்லாது வானம் பெயல் - ஆபயன் குன்றும் - அறுதொழிலோர் நூல் மறப்பர் - என்று. அ. வி.-6