பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S6 கூறப்பட்டன வெல்லாம் குறிப்பால் உணர்ந்தறியத் தக்கன வாகும். கொடுங்கோன்மையின் கொடுமையினையும், அவன் நாடும், மக்களும் அடையும் துன்பத்தினையும் அவ னுக்குண்டாகும் கேட்டினையும் எடுத்துக் காட்டின. முதற் குறட்பா கொலை செய்பவனை விடக் கொடிய வன் என்று கூறுகிறது. இரண்டாம் குறள், கொடுங் கோலன் வழியில் நின்று மக்களைக் கொள்ளையடிப்பவன் போன்றவன் என்று கூறுகிறது. செல்வத்தினைத் தேய்க்கும் படை எது என்பதனை ஐந்தாம் குறட்பா எடுத்துரைக் கின்றது. மழை இல்லாமை இப்பூமிக்கு எவ்வளவு கொடுமை தருமோ அதுபோல, கொடுங்கோலன் ஆட்சி மக்களுக்குத் தீமை தரும் என்பதாகும். ஒன்பதாம் குறட்பா இயற்கையும் தனது தொழிலினைச் செய்து, கொடுங்கோலன் நாட்டிற்கு நன்மை பயக்காது என்று தெளிவு படுத்துகிறது. பூமியின் செழிப்பு பசுக்களிள் செழுமையினைக் கொண்டு அறியப்படுதலாகும் என்று பத்தாம் குறட்பா உணர்த்துகிறது. நாட்டில் அறுதியிட்டுக் கூறப்படுகிற தொழிலனைத்தையும் அறுதொழில்' என்று பத்தாம் குறட்பா குறிக்கின்றது. உலகில் நடைபெறும் தொழில்கள் அனைத்தையும் ஆறு வகைகள் என்று கூறப்படினும் பொருந்தும். தொழிற்கலை நாட்டில் கெட்டு வருமே யானால் அந்த நாடு அழிந்து விட்டதென்றே பொருளாகும். கஆபயன்' என்றதால் இயற்கைவளமும், தொழிலோர்' என்பதால் செயற்கையான முயற்யும் குறிக்கப்பட்டன. 57. வெருவந்த செய்யாமை குடிகள் அஞ்சுவதும், தான் அஞ்சுவதும், பணிபுரிவோர் அஞ்சுவதுமான தொழில்களைச் செய்யாதிருத்தலாகும். அவ்வாறு செய்தலும் கொடுங்கோன்மை போன்று கொடி தேயாகும். வெருவந்த" என்றது கடுமையான அஞ்சத்தக்க செயல்களேயாகும். குடிமக்கள் அஞ்சி நடுங்கக் கூடியவை