பக்கம்:திருக்குறள் உரை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 'களை கட்டதனோடு நேர்' என்றதால், அரசனின் ஒறுத்தலைக் கொலை செய்தல் என்று கொள்வதில் தவறில்லை. 550. 56.கொடுங்கோனிமை அறநெறிச் சார்பும் நீதித்தன்மையும் இல்லாது ஆளுதல் கொடுங்கோன்மை. அரசிடம் அதிகாரங்கள் மையப்படுத்தப் பெற்றுள்ளன, அரசின் அதிகாரங்கள் அரசுக்காக அல்ல. மக்களுக்காகவே அரசிடம் அதிகாரங்கள் மையப்படுத்தப் பெற்றுள்ளன. அரசு தன்னுடைய அதிகாரத்தை முறையாகச் செலுத்திமக்களுக்கு நம்பிக்கையும்,நல்லெண்ணத்தின்பாற்பட்ட வாழ்க்கையும், உத்திரவாதம் உள்ள நல்வாழ்க்கையும் வழங்க வேண்டும்.இங்ங்ணம் வழங்கும் அரசு செங்கோல் அரசு. இதற்கு மாறாக மக்களை வருத்தித் துன்புறுத்தும் அரசு கொடுங்கோல் அரசு. தமிழ்நாட்டு மக்கள் கொடுங்கோல் அரசுகளைப் பெரும்பாலும் சந்தித்ததில்லை . 551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. பகை காரணமாக ஒருவரைக் கொல்லத் துணிந்து கொலை செய்பவரினும் கொடியவன் தமது ஆசை காரணமாக மக்களை அலைக்கழிவு செய்து துன்புறுத்தும் அரசன். பகை கொள்ளுதல் தீது, ஒரோவழி பகை கொண்டாலும் பகைமையை மாற்றிக் கொள்வதற்குரிய நன்னெறிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பகை காரணமாக ஒருவரைக் கொல்ல நினைப்பது குற்றம். அரசு இயற்றுவோர் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக எளிமையும் சீலமும் உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்பது உணர்த்தியது. எவர் ஒருவரும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவே விரும்புவர். அதனால் மக்களுக்கும் பிறருக்கும் துன்பத்தையே தருவர். 551. 552. வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு கையில் வேல் கொண்டு நின்று வழிச் செல்வோரிடம் பொருள் தா' என்று கேட்டல் இரவு அன்று. அஃது அச்சுறுத்தித் துன்பம் தரும் வழிப்பறியேயாம். அதுபோலத்தான் அதிகாரம் பெற்றுள்ள அரசு குடிமக்களிடம் இரந்து கேட்பது உமாம். அதாவது அரசு, அச்சுறுத்தல் இன்றி வரி முதலியனவற்றைத் தண்டுதல் வேண்டும் என்பது உணர்த்தியவாறு. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை