பக்கம்:திருக்குறள் உரை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். முறைமை தவறி குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு உள்ள நாட்டில் பருவ மழையும் பெய்யாது. பருவம் தப்பிய நிலையில் கூட மழை பெய்யாது. முறை தவறிய அரசு நிலவும் நாட்டில் பருவ மழை பொய்க்கும். என்பது நம்பிக்கை மட்டுமல்ல; உண்மையும் கூட. 559, 560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின. உயிர்களைக் காத்தற்குரிய அரசு கடமை தவறி மக்களைக் காக்கத் தவறிவிடின் அந்நாட்டில் பசு பால் கறக்காது. அந்தணர் மறைகளை ஒதுதலை மறபபர, பேணுபவர்க்கே பயன் தருவன பசுக்கள். பேணிக் கேட்போருக்கே அந்தணர் மறை ஒதுவர். கொடுங்கோல் அரசில் இவை நிகழ வாய்ப்பில்லை என்பது கருத்து. 560, 57.வெருவந்த செயியாமை அஞ்சத்தக்க காரியங்களைச் செய்யாமை. தான் அஞ்சக் கூடியவற்றையும் மற்றவர்கள் அஞ்சக்கூடியவற்றையும் செய்யாதிருத்தல். 56. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. ஒருவருடைய குற்றத்தை முறையாக நடுவு நிலையில் நின்று ஆராய்ந்து அக்குற்றத்தைச் செய்தவர் மேலும் செய்யாத வண்ணம் தடுக்கும் நோக்கத்துடன் குற்றத்திற்கு ஏற்றவாறு தண்டிப்பவனே நல்லரசன். ஒருவருடைய குற்றத்தை முறையாக விசாரித்தறிதலை தக்காங்கு நாடி என்றார். தண்டனை வழங்குவதன் நோக்கம் ஒறுத்தலன்று. மேலும் குற்றம் செய்யாது திருத்தமுறுதலுக்கே என்பதனை உணர்த்த தலைச் செல்லா வண்ணத்தால் என்றார். 561. 562. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர். e ஆட்சிச் செல்வம் நெடிய காலம் நிற்றலை விரும்பும் அரசர், குற்றவாளியைத் தண்டிக்கும் பொழுது தண்டனையைக் கடுமையாகக் காட்டி, மென்மையாகச் செய்க. 170 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை