பக்கம்:திருக்குறள் உரை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் 642. ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. ஆக்கமும், அழிவும் சொற்களால் வருவன. ஆதலால் சொல்லின்கண் சேர்வு வராமல் பாதுகாத்துக் கொள்க. சொற்களில் சேர்வுபடுதலாவது, தகாதனவற்றைச் சொல்வது. 642. 643. கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். நமது சொற்களைக் கேட்டவர்களை நட்புணர்வுடன் பிணைக்கக் கூடியனவாகவும் கேளாரும்-நட்பை அவாவிக் கேளாதவரும் கேட்க விரும்பும் சொற்களை மொழிவதே சொல். சொற்களின் தோற்றம் - வளர்ச்சி நட்புணர்வினை வளர்ப்பதற்கே என்பது தேற்றம். ஆதலால் வெறுப்பு, பகையை வளர்க்கும் சொற்களைச் சொல்லக் கூடாது என்பது தெளிவு. もA3・ 644. திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனின்ஊஉங்கு இல், சொற்களின் திறன்(விளைவிக்கும் பயன்) அறிந்து சொல்லுக. இங்ங்ணம் சொல்லுதலில் சிறந்த அறமும் பொருளும் ஈண்டு இல்லை. எளிதில் கேட்பவரின் நெஞ்சத்தில் புகுந்து பயன் விளைவிக்கும் சொற்களே திறப்பாடுடைய சொற்கள். “கேட்பவரின் திறன் அறிந்து சொல்லுக' என்று பொருள் கொள்ளுதலும் கூடும். சொற்களின் பயண் அறமாகவும் பொருளாகவும் அமையும் என்பது தெளிவு 645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து. ஒன்றைச் சொல்லும்முன் ஆராய்ந்து சொல்லுக. சொல்லும் சொல்லை வேறொரு சொல் வெல்லாமல் இருக்கும்படியாகச் சொல்லுக. "சொல்'- மானுடத்தின் நிகழ்வுகளுக்குப் புறநிலையில் தொடக்கமாயமைவது. சொல்லப்பெறும் சொல் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப் பெறாத நிலையில் விவாதங்கள் வளரும். வெற்றி - தோல்விச் சிக்கல்கள் உண்டாகும். ஆதலால், பிறிதொரு சொல் வெற்றி பெறக்கூடிய சொற்களைச் சொல்லற்க. 645. 196 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை