பக்கம்:திருக்குறள் உரை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் சொல்லக் காமுறுவர். பல சொல்லுதலால் நோக்கங்கள் பாழ்படுதலும் கூடும். காலச் சேதமும் ஆற்றல் செலவும் கூடும். 649. 650. இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துஉரையா தார். கற்றறிந்தனவற்றைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்க இயலாதவர்கள் மலர்ந்தும் மணமில்லாத மலர் அனையர். கற்பது, அறிவதற்காக மட்டுமன்று சொல்லவுமேயாம். கற்றுயர்ந்ததைச் சொன்னாலே அறிவு வளர்ந்து செயற்பாட்டுக்கு வருகிறது. 650. 66. வினைத்துாயிமை வினை ஒருவன் செய்யும் செயல் -தொழிலைக் குறிக்கும். எது வினை? என்பான் கம்பன், செய்யும் செயலின் தொழிலின் தூய்மையாவது செய்யும் தொழிலைப் பிழைப்பாகக்கருதாமல் மனிதநேயத்தை மையமாகக் கொண்டதாக மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதாக அமைதல். மானுட வாழ்வியலின் மேம்பாட்டுக்குரிய அறம்,பொருள், இன்பம் பயப்பனவாக அமைதல் வேண்டும். சொற்கள் வினைத்துண்டுதலுக்குரியன. அதனால் சொல்வன்மையைத் தொடர்ந்து வினைத்துய்மை சொன்னார். 651. துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். ஒருவருக்கு அமைந்த துணை, செல்வம் தரும். வினைத்துாய்மை வேண்டுவன எல்லாம் தரும். துணையின் பயன்பாட்டளவு எல்லைக்குட்பட்டது. ஆனால், வினைத்துய்மை பலரை ஈர்க்கும். பலப்பல பயனைக் கூட்டும். அதனால், துன்பத்தின் காரண காரியங்களை அறிந்து அவற்றை ஆள்வினைத் திறனுடன் சந்தித்து மாற்றுதலேயாம். இன்று வினைநலமின்மை ஆக்கந் தருகிறது. சுரண்டுதல், வினைநலமற்றது. இத்தகு தீவினை இயற்றுவோர் இன்று வாழ்கின்றனர். (வாழாது வாழ்கின்றனர்) மக்கள் விழித்தெழுக. 651. 652. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. 198 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை