பக்கம்:திருக்குறள் உரை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆள்வோர் தமக்கு இளையர் என்றும் இனவழி உறவினர் என்றும் உறவும் உரிமையும் கொண்டாடுவதன் மூலம் ஆள்வோரை அவமதிக்காது அரசின் ஆட்சி ஒளியோடு ஒன்றித்துப் பழகுதல் வேண்டும். அரசின் ஆட்சிமுறையே மிக்குயர்ந்தது. ஆதலால் 'ஒளி' என்றார். ஆள்வோர் உறவையும் நட்பையும் கூட்டிக் காரியங்கள் செய்வதே நேற்றும் இன்றும் நடைமுறை. 698. 699. கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்குற்ற காட்சி யவர். அரசின் ஆதிக்க எல்லையில் கொள்ளப் பெற்றமையை எண்ணி, ஆள்பவர் விரும்பாதனவற்றைச் செய்ய மாட்டார்கள், நிலையான அறிவினை 9-60LILIS) is 56ts. “அதிகாரம்' நிலையானது அல்ல. ஆதலால், அதிகாரத்தில் இருக்கும் பொழுது விழிப்பாக இருப்பர் அறிவுடையோர். 699. 700. பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். அரசனிடம் பழகிய பழக்கம் உடையோம் எனக்கருதிப் பண்பல்லாதனவற்றைச் செய்யும்பொழுது-உரிமையுடன் பணிகளைச் செய்யும் பொழுது உரிமைக்குக் கேட்டினைத் தரும். உயர்ந்தோரிடம் நாம் கொள்ளும் பழக்கங்கள் வழி உளவாகும் உறவு, உறவுக்காகவே, உரிமைக்காகவல்ல என்று எண்ணிப் பழகுதல் நன்று. 700. 71. குறிப்பறிதல் நடை, உடை பாவனைகளால் ஒருவருடைய எண்ணத்தை அறிந்து கொள்ளுதல். குறிப்பாகப் பொறிகளில் ஏற்படும் அசைவுகள், மாற்றங்களைக் கொண்டு ஒருவருடைய எண்ணத்தை அல்லது நோக்கத்தைத் தெரிந்து கொள்ளல் . - வாழ்க்கையை இனிய வெற்றிகளுடன் இயக்கக் குறிப்பறிந்து செய்தலும் ஒழுகுதலும் துணை. 701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 213