பக்கம்:திருக்குறள் உரை.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 888. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. அரத்தின் வயப்பட்ட இரும்பு தேய்தல்போல உட்பகையுடையாரால் குடி தேயும். இரும்பில் அரம் பொருதினால் தேய்மானம் ஆகும். உட்பகையுடையார் கூட்டினால் குடி கெடும். 888. 889. எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. உட்பகை எள்ளளவினதேயாயினும் அழித்தற்குரிய உள்ளீடு உள்ளது என்பதறிக. "உட்பகை' அளவினால் கணக்கிடப்படுவதன்று. உட்பகையின் எதிர் விளைவுகளே கணிப்பிற்குரியன. 889. 890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று. உளம் சார்ந்த உடன்பாடில்லாதவருடன் கூடி வாழ்தல் என்பது பாம்புடன் கூடி வாழ்தலை ஒத்தது. பாம்பாயினும் பழக்கத்தால் தீமை செய்யும் இயல்பு மாறும். ஆனால், உட்பகையுடையார் மாறுவரோ என்ற ஐயம் எழும்புகிறது. 890, 90. பெரியாரைப் பிழையாமை தம்மில் பெரியாரை மதித்து ஒழுகுதல்; அவமதிக்காமல் மதித்தல். பெரியார் என்பதற்குத் தவத்தர் என்று பொருள் கொள்ளல் பொருந்தாது. சினம் கொள்ளுதலும் அவ்வழித் துன்புறுத்தலும் தவம் ஆகா. 891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. ஆற்றலோடு கடமைகளைச் செய்யும் வலிமையுடைய தக்காரை அவமதிக்காமல் மதித்துப் போற்றுதல் காப்பினுள் எல்லாம் சிறந்த காப்பாகும். கருதியது செய்து முடிக்கும் ஆற்றலுடையார் உறவினை மதித்துப் போற்றி ஒழுகினால் அவர்தம் ஆற்றல் காப்பாக அமையும். 891. 892. பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும். 262 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை