பக்கம்:திருக்குறள் உரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் கற்புடையராதல் சிறப்பே. ஆயினும் அக்கற்பொழுக்கம் திண்மை யுடையதாக உறுதியும் ஆற்றலும் உடையதாக வளர்ந்து இடர்கள் வந்துற்றபோது போராடுதல் திண்மையாகும். இது மிகவும் விழுமியது. 54. 55. தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. தெய்வத்தைத் தொழாது கணவனைத் தொழுது எழுபவள் பெய்யெனப் பெய்யும் மழை போல்வாள். தேவையின் போது பெய்யும் மழை தப்பாது பயன் தருதல் போல் கணவனையே தொழுது வாழ்பவள் பயன்தரத்தக்கவளாக இருப்பாள். 55. 56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். கற்பொழுக்கத்தில் தன்னைக் காத்துக் கொள்வதுடன் தன்னுடைய கணவனையும் பேணிக் காப்பாற்றுபவளும் சோர்விலாதிருப்பவளும் பெண். தற்காத்தல் - கற்பு, உயிரினைச் சார்ந்த ஒழுக்கம் - பிறர் காத்தல் அரிது என்பதால் தற்காத்து' என்றார். தற்கொண்டான் பேணல் :- காதலின்பம் குறைபடாதவாறு, ஒழுகி வழங்குதல்வழி தன் கணவனின் கற்புக்குத் துணையாய் அமைதல். சொற்காத்தல்:- உணர்மையும் இல்லாமையும் குறைகளும் குற்றங்களும் ஊடலும் மற்றவர் அறியாதவாறு பாதுகாத்தல். சோர்விலாள்:- குடும்பப் பாதுகாப்புப் பணி மிகப்பெரிது. சோர்வின்றி அனைத்துத் துறைகளையும் கண்காணித்துச் செய்தல், 56. 57. சிறைகாக்கும் காப்புளவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. மகளிரின் கற்பொழுக்கமே தலையாயது. சிறைப்படுத்திக் காக்கும் காப்பால் யாதொரு பயனுமில்லை. 57. 58. பெற்றால் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. பெண்மைக்குரிய சிறப்பியல்புகளை அடைந்து சிறப்புறும் பெண்ணை ஒருவர் வாழ்க்கைத் துணைநலமாகப் பெறின் இன்ப உலகினை எய்துவர். - 58. 28 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை