பக்கம்:திருக்குறள் உரை.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஒரு குடும்பம் தொடர்ந்து மேம்பாட்டுடன் விளங்க, அடுத்துவரும் தலைமுறை ஆற்றல்மிக்கதாக விளங்கவேண்டும் என்றுணர்த்தியவாறு. 1030. 104. உழவு உழவுத்தொழில்பற்றியும் உழவுத் தொழிலின் மேம்பாடுபற்றியும் கூறும் அதிகாரம். 1031. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னும் உலகம் ஏரின் பின்னாகவே நிற்கிறது. ஆதலால் எங்கு சுற்றியும் உழவுத்தொழிலே தலையாய தொழில். உலகம் பல்வேறு முயற்சிகளின் பின் சுற்றினாலும் உழவினாலாய உணவு தேவை எண்பதால் எல்லா முயற்சிகளும் உழவுத் தொழிலுக்குப் பின்னேதான் என்று கூறியது. 1031. 1032. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. உழுவார் உலகத்தாருக்கு ஆணி. மற்றெல்லோரையும் தாங்கி நிற்றலால்."ஆணி’ தாங்கும் உறுப்பு. அச்சாணி என்றும் கூறுவர். உழவுத் தொழில் செய்வோரே மற்றைத் தொழில் செய்வோருக்கும் உணவளித்தலால் ஆணி’ என்று சிறப்பித்தார். 1032. 1033. உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம் தொழுதுஉண்டு பின்செல் பவர். உழுதுண்டு வாழ்பவர்களே வாழ்பவர்கள் என்று கருதப்படுவார்கள். மற்றையோர் பிறரைத் தொழுது உண்டு அவர் பின் செல்பவர். உழுதுண்பவர் வாழ்நிலை சுதந்திரமானது. மற்றைத் தொழில் செய்வாரும் உணவுக்கும் உடைக்கும் மற்றவரைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதால் "தொழுதுண்டு’ என்றார். 1033. 1034. பல்குடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அல்குடை நீழல் அவர். - பல அரசர்களின் வெண்கொற்றக் குடைகளும் தம் குடைக்கீழ்க் காண்பர், நெற்கதிர் விளைவிக்கும் தொழிலுடைய உழவர். உழவர் பெரும்பாலும் குடை பிடிப்பதில்லை. உழவர் குடையின் கீழ், அரசர்களின் வெண்கொற்றக் குடைகள், ஆம்! அரசர்களுக்கும் உணவு இன்றியமையாதது. 1034. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 295