பக்கம்:திருக்குறள் உரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தொழிற்படுவது.அதனால், நட்பு வந்தமையும் நட்பு தீமை அகலுதலுக்கும் நன்மை பெறுதலுக்கும் துணையாய் அமைவதால் “சிறப்பு” என்றார். 4. 75. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. இவ்வுலகத்தில் இன்பம் துய்ப்பவர்களாகச் சிறப்புற்றவர்கள், பிறரிடத்தில் அன்புடையராய்ப் பொருந்தி வாழ்ந்ததனால் அமைந்த வழக்கமாகும். 75. 76. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. அன்பு, அறத்திற்கே துணை என்று கூறுவர் அறியாதவர். மறத்திற்கும் அன்பே துணை. மறம் - தீமை. தீமைக்குத் தீமை ஒருபொழுதும் தீர்வு ஆகாது. தீமைக்கும் நன்மையே தீர்வுக்குரிய வழி. தீமையையும் அன்பால்தான் வெற்றிபெற வேண்டும். 76. 77. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். எலும் பில்லாத புழுக்களை வெயில் சுட்டு அழிப்பது போல அன்பில்லாதவர்களை அறம் சுட்டு அழிக்கும். 77. 78. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வண்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. உள்ளத்தில் அன்பில்லாத உயிர்வாழ்க்கை, பாலை நிலத்தில் பட்டுப்போன மரம் தளிர்த்தல் போலும். பாலை நிலத்தில் பட்ட மரம் துளிர்க்காது. அதுபோல, உள்ளத்தில் அன்பில்லாதவரின் உயிர் வாழ்க்கையும் வளராது. 78. 79. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. வாழ்க்கையைச் சிறப்புறச் செய்யும் உடம்பினுள் அகத்தில் இருந்து உதவி செய்யக்கூடிய அண்பை உறுப்பாகப் பெறாதவர், வாழ்க்கை சிறப்புறுதற்குத் துணை செய்யக்கூடிய புறத்துறுப்புக்கள் பெற்றிருந்தாலும் சிறப்படைய முடியாது. r அகத்துறுப்பு - அன்பு தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 31