பக்கம்:திருக்குறள் உரை.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இண்பத்துப்பால் 130, நெஞ்சொடு புலத்தல் 1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகாதது. 1292 உறாஅதவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியேன் நெஞ்சு. 1293. கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செல். 1294 இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. 1295. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவஞ்சும் அறாஅ இடுபைத் தென்நெஞ்சு. 1296. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு. 1297. நானும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு. 1298. எள்ளின் இளிவாமென்றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. 1299. துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சத் துணையல் வழி. 1300. தஞ்சம் தரமல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி. 329 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை