பக்கம்:திருக்குறள் உரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. தனக்குத் துன்பம் செய்தாரைஒறுத்தலுக்குரிய ஆற்றல் இருந்தாலும் அவர் செய்த துன்பத்தைப் பொறுத்திடுக. அங்ங்ணம் பொறுத்தலோடன்றி அந்தத் துன்பத்தை மனங்கொள்ளாது மறந்திடுதல் பொறுத்தலினும் நன்று. பொறுத்தல் ஆற்றாமையினாலும் நிகழும்; ஆதலால் சிறப்பாகாது. மறத்தல் அங்ஙனமன்று. 部,角 e அதோடு பொறுத்தல் வழி மனத்தில் அந்தத் துன்பம் தங்கியிருந்து வாய்ப்புழி வெளிப்பட வழியுண்டு. மறத்தல் அங்ங்ணமன்று. மேலும் மறப்புழி உறவு ஏற்பட்டு வளரவும் வாய்ப்புண்டு. அதனால், மறத்தல் நன்று என்றார். 152. 153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. வறுமையுள் வறுமை- விருந்தினரை ஏற்காது நீக்குதல், அதுபோல, வலிமையுள் வலிமை அறியாமையால் துன்பம் செய்தாரைப் பொறுத்தல். விருந்தை நீக்குதல் பொருளுடைமைக்கு அழகன்று. அதுபோல அறியாதவர் செய்யும் தீமையைப் பொறுக்காது ஒறுத்தல் வலிமைக்கு அழகன்று என்பது கருத்து. 153. 154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். ஒருவண் தன்னிடம் சால்பு நீங்காது தங்கிச் சிறப்புறுத்த விரும்புவானாயின் அவன் பொறையுடைமைப் பண்பைப் போற்றிக் காத்து ஒழுகவேண்டும். 154. 155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. 始 பிறன் ஒருவன் தீங்கு செய்த வழி, அதனைப் பொறுத்தாற்றாது, தீங்கு செய்தவனை ஒறுத்தாரை, அறிவுடையோர் மனத்துட் கொள்ளார். ஆத்திழையினைப் பொறுத்தாரைப் பொண் போல் போற்றி நினைவிற் கொள்வர். 155. 156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ. 48 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை