பக்கம்:திருக்குறள் உரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் உடைமைகளுக்கும் குற்றங்கற்பித்தலும் சொல்லுதலும் செய்தல். இங்ங்ணம் செய்தலின் பகை வளர்தலாலும், தன்னாக்கத்திற்கு முயலக் காலம் இல்லாது போதலாலும், துன்பம் வரும். 164 165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடுஈன் பது. மனத்தில் அழுக்காறுடையார்க்கு கேட்டினைச் செய்ய அழுக்காறே போதும், பகைவர் வேண்டியதில்லை. பொறாமைக்காரனால் பிறருக்குத் தீங்கு செய்யும் ஆற்றல் இல்லாமல் போகலாம். அல்லது அச்சத்தால் தீங்கு செய்யாமல் இருக்கலாம். ஆனாலும் அப்பொறாமை, தன்னையுடையானுக்குத் தீமை செய்தல் இயற்கையின் நியதி. 165. 166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும். ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவனுடைய சுற்றம் உடுப்பது உம், உண்பது உமின்றிக் கெடும். தேவைப்படுபவர்க்குத் தாம் உதவி செய்ய வேண்டியிருக்கத் தாம் உதவி செய்யாததோடன்றி மற்றவர் வழங்கும்பொழுதும் பொறாமையின் காரணமாகத் தடுத்தல் கொடுமையிலும் கொடுமை. இக்கொடுமையால் வழங்குவானின் அறவுணர்வு தடுக்கப்படுகின்றது. வறியவனுக்கு உதவி கிடைக்காமையால் அவனுடைய வயிற்றெரிச்சலும் சேர்கிறது. ஒருவனுடைய ஒழுகலாற்றுக்கு அவன் வாழும் சுற்றமும் சமுதாயத்தின் சூழ்நிலைகளும் காரணம் என்பதால் “சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும்’ என்றார். 166. 167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். பிறராக்கம் கண்டவிடத்தில் பொறாமை கொள்பவனைக் கண்டு திருமகள் பொறாது தன்னுடைய அக்கையாகிய மூதேவிக்குக் காட்டிவிடுவாள். அழுக்காறுடையார் பிறர் செல்வத்தை இழக்கச் செய்யும் முயற்சியிலேயே ஈடுபடுவர். தாம் செல்வத்தைப் பெறுதலுக்குரிய முயற்சிகளில் ஈடுபட மாட்டார்கள். ஆதலால் வறுமையில் ஆழ்வர். 167, தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 51