பக்கம்:திருக்குறள் உரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஒருவன் தனக்கு இன்பம் என்று கருதிச் செய்யும் தீவினைகள் இன்பம் தரா. தீமையே தரும். அதனால் தீயைவிடத் தீவினை அஞ்சத்தக்கது. தி ஒரோவழி நன்மையும் செய்யக் கூடியது. தீவினையால் யாதொரு நன்மையும் இல்லை. அதனால், தீயினும் அஞ்சப்படும் என்றார். தீயின்றி உலக இயக்கமில்லை; தீவினை இல்லாதிருத்தலே சிறந்த உலக இயக்கம். 202. 203. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். தம்மைப் பகைப்பவர்க்கும் தீமையைச் செய்யாது விடுதலே அறிவுச் செயல்களுள் தலையாயது என்று அறிஞர் கூறுவர். தீமைக்குத் தீமை செய்தாலும், அங்ங்ணம் தீமை செய்தலால் மனம் மொழி மெய் கெட்டு விடுவதனால் தீமை செய்தாருக்கும் தீமை செய்யற்க எனறார. தீமை செய்வாரை அறிவு கொளுத்தித் திருத்தல் சிறப்பு. தண்டம் விதித்தும் திருத்தலாம். இங்கு தண்டம் விதிப்பது தீமை செய்தலாகாது. 203. 204. மறந்தும் பிறன்கேடு தழற்க துழின் அறம்தழும் சூழ்ந்தவன் கேடு. ஒருவன் மற்றவர்க்குக் கேடு செய்யக் கூடிய வினையை மறந்தும் எண்ணக்கூடாது. அங்ங்ணம் கேடு சூழின் அவனுக்கு (கேடு சூழ்வோனுக்கு) அறக்கடவுள் சூழ்ந்து கேடு செய்யும். 204. 205. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. தான் வறியவன் என்று கருதி வறுமை நீக்கத்திற்காகப் பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்யற்க. வறுமை நீக்கத்திற்காகத் தீமை செய்யின் அவ்வழி வளமுடையனாதல் அரிது; மீண்டும் வறியவனாவான். வறுமை நீக்கத்திற்கு பொருள் பெறும் தகுதியாகிய அறிவறிந்த ஆள்வினையில்லாமல் பிறரை வஞ்சித்து ஏமாற்றி அவர் பொருளைக் கொள்வது பொருளுடைமையாகாது. அங்ங்ணம் ஈட்டும் பொருள் துய்ப்புழி நீங்கிவிடும். பின் எய்துதல் அரிது. அது மட்டுமன்று யாரை வஞ்சித்துப் பொருள் கொள்ளப்படுகிறதோ அவர் அப்பொருளைத் திருப்ப முயன்று பறித்துக் கொண்டாலும் கொள்வர். ஆதலால், வறுமை நீக்கத்திற்குப் பொருளுடைமை நேரிடையான மாற்று அல்ல. பொருள் ஈட்டுதற்குரிய தகுதியைப் பெறுதலே சரியான மாற்றம். 205. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 61