பக்கம்:திருக்குறள் உரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். துன்புறுத்துவனவாகிய குற்றங்கள் தம்மையடைந்து வருத்தக்கூடாது என்று நினைப்பவன் தியனவாகிய பாவங்களைப் பிறரிடத்துச் செய்யாது தவிர்த்திடுக. 206. 207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வியாது பின்சென்று அடும். எத்துணைப்பெரிய பகையுடையாரும் அப்பகையினின்றும் தப்பித்து உய்தல் கூடும். ஆனால், பிறர்க்குத் தீவினை செய்தால் அத்தீவினை, செய்தவரைத் தொடர்ந்து சென்று துன்புறுத்தும். தீவினை செய்தற்குரியனவாக அமைந்த உணர்வுகள் நீங்காமையின் துன்புறுதல் இயற்கை. பிறர்க்குத் தீவினை செய்தால் அத்தீவினையின் விளைவால் தப்பாது கெடுவர். 2O7. 208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வியாது அடிஉறைந் தற்று. ஒருவனது நிழல் அவன் எங்கு சென்றாலும் அவனைத் தொடர்ந்து அவனிடத்திலேயே தங்குவதுபோல், ஒருவன் தீவினை அவனைத் தொடர்ந்து வந்து துன்புறுத்தும். 208. 209. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துண்னற்க தீவினைப் பால்.

  • துன்பப்படாமலிருக்க ஒருவன் தனக்குத்தானே ஆசைப்படுவானாவின் யாதொரு தீமையும் பிறர்க்குச் செய்யாது விடுக.

银 பிறர்க்குத் துன்பம் செய்பவன் இன்பத்தை அடைதற்கு இயலாது என்பது நியதி. 209. 210. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் - தீவினை செய்யான் எனின். ஒருவன், செந்நெறியினின்று ஒருபக்கமாக விலகிச் சென்று பிறர்க்குத் தீமை செய்யானாயின் அவன் கேடில்லாதவன் என்பதை அறிக. குத 62 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை