பக்கம்:திருக்குறள் உரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் “அருங்கேடன்' என்று சொன்னார், கேடு வருவது அருமை எண்பதனால், கேடு வருதல் அருமையென்று கூறியதால் ஒரோவழி வரும் என்பதும் பெறப்பெற்றது. அங்ங்ணம் வரும் கேடு உண்மையில் கேடன்று. “ நத்தம் போல் கேடு' என்று பொருள். 210. 22. ஒப்புரவறிதல் தமக்கு இன்பமாயின என்னவெனத் தெரிந்து வாழ்பவர்கள் அத்துணை இன்பங்களும் மற்றவர்க்கும் வேண்டுவனவே என்ற உணர்வுடன் மற்றவர்கள் கேளாமலே உதவி செய்து வாழ்தல் ஒப்புரவு, ஈதலினும் ஒப்புரவு உயர்ந்தது. இந்த ஒப்புரவுக் கொள்கை தருமகருத்தாக் கொள்கையை ஒத்தது. சம வாய்ப்புச் சமுதாயம் காணத் துணை செய்வது. ஒப்புரவு - சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய பொது அறம். 21. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு. உலகத்தவர்கள் தமக்கு மழை பொழிந்து உதவி செய்யும் முகிலுக்கு (மழைக்கு) எத்தகைய கைம்மாறு செய்ய இயலும்? அதுபோலவே, பருவம் அறிந்து ஒப்புரவு செய்து ஒழுகுவது கைம்மாறு நோக்குடையதல்ல. 211. 212. தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தப் பொருட்டு. ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த செல்வம் முழுவதும் தகுதியுடையவர்க்கு உதவி செய்தல் பொருட்டாம். உழைத்து முயன்று பொருளீட்டுதலும் ஒப்புரவு செய்தலும் உடனிகழ வேண்டியன. 213. புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் நல்ல பிற. ஒப்புரவு செய்தலைப்போன்ற நல்ல செயல்களைத் தேவருலகத்திலும் இந்த உலகத்திலும் பெறலரிது. இன்றும் அரிதாகவே ஒப்புரவு விளங்குகிறது. 213. 214. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 63