பக்கம்:திருக்குறள் உரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஒப்புரவாளன் வறியனாதலாவது, தாம் தவறாது செய்யும் வேளாண்மைச் செயல்களைச் செய்ய இயலாது கிடக்கும் நிலையேயாம். செல்வம் இண்மை வறுமை அல்ல. ஒப்புரவு செய்யாமையே வறுமை, 219, 220. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து. ஒப்புரவினால் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமாயினும் அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளத் தகுதியுடையது. ஒப்புரவினால் வரும் கேடு புகழுக்குரியது மறுமை இன்மைக்குரியது. 220. 23, ೯೯೮)ás (வறுமையுற்றோருக்கு வழங்கி உதவுதல் ஈகை) 221. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. பொருளில்லாத வறியவர்க்குக் கொடுப்பதே 开6ö)岛。 வளமுடையவர்க்குத் தருவதெல்லாம் ஈகைஅல்ல. அவை திரும்பிப் பெறும் குறிப்புடையன. வறியார், தம் வறுமைக்கு மருந்தாகவே பெறுவர். வறியவரால் பெற்றதைத் திருப்பித் தர இயலாது, வறியவராதலால் வேறு எவ்வகையிலும் திருப்பி ஈடு செய்ய முடியாது. வளமுடையோர் திருப்பித் தர இயலும். பொருள் அளவில் இல்லையானாலும் புகழ்தல் முதலியவற்றாலும் இயலும். 221. 222. நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்எனினும் ஈதலே நன்று. பிறரிடத்தில் வாங்குவது வீட்டுலகைத் தரும் நல்லவழி என்றாலும் பெற்றுக் கொள்ளுதல் திதேயாம். வீட்டுலகத்தை அடைய முடியாது என்றாலும் ஈதலே நன்று. இரந்து ஏற்பதும் இழிவன்று, விட்டுலகம் கிடைக்கும் என்ற புறநெறி வழக்கு மறுத்தது. - 222. 223. இலண்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 65