பக்கம்:திருக்குறள் உரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் அப்பொருளின் மீது பற்று இல்லாமல் பசியால் வருந்துவோருக்கு வழங்கிப் பசியை மாற்றுவது என்பது எளிதில் வரக்கூடிய பண்பன்று. பசியைப் பொறுப்பாரிடம் விஞ்சியிருப்பது ஆற்றும் பண்பே, பசியை மாற்றுவோரிடம் ஆள்வினை பொருள் பற்றின்மை ஈகை ஆகிய முத்திறப் பண்புகள் சிறந்து விளங்குதல் அறிக. 225, 226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது.ஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி. வறியவரை அழிக்கும் பசியை ஆற்றுவதே பொருள் பெற்றவன், பொருளைச் சேமித்துப் பாதுகாக்கும் வழி. “பொருள் வைப்புழி'- இன்றைய வங்கியை நினைவு கூர்க! நாம் சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக வங்கியில் இட்டுவைக்கிறோம். வங்கிகள் அந்தப் பொருளினை வறியவர்க்கு வழங்கி வாழ்வளிக்கிறது. வங்கிச் செயல் முறையால் பொருள் பாதுகாப்பு பொருள் (வட்டி மூலம்) வளர்ச்சி, வறியவர் வாழ்வு பெறுதல் ஆகிய பணிகள் நடைபெறுவதை அறிக. பக்கத்து வீட்டில் பசியால் வாடும் வறியவன் இருந்தால் ஒருவன் பெற்றுள்ள பொருள் கொள்ளை போகும் என்பது உம் அறிக. வறுமையற்ற சமுதாயம் அமைத்தல் வளத்தைப் பேணிப் பாதுகாக்கும் வழியுமாம். 226, 227. பாத்துண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. எப்போதும் பலரோடும் பகுத்துண்டு பழகியவனை வறுமையால் வரும் பசி தீண்டாது. 'பசி உடல் நலத்தின் அடையாளம், ஆதலால் வாளா பசியென்று கூறாது, பசியென்னும் ‘தீப்பிணி' என்றார். பகுத்துண்ணும் பழக்கமுடையோருக்குப் பலரை உண்பிப்பதிலேயே உண்டது போன்ற மனநிறைவு ஏற்படும். அதனால்,"பசியென்னும் தீப்பிணி தீண்டலரிது’ என்றார். மேலும், பகுத்து உண்பவரின் பசியை மற்றவர்கள் தாங்க மாட்டாது போற்றுவர். அதனாலும் தீண்டலரிதாகும். 227. 228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வண்க ணவர். தாம் உடைய பொருளை யாது வைத்திருந்து பின்பு கள்வர் முதலியவரால் கொள்ளப் பெறுதலால் இழக்கும் கல்நெஞ்சர், வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ? தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 67