பக்கம்:திருக்குறள் உரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 277. புறம்குன்றிக் கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கில் கரியார் உடைத்து. குன்றி மணியைக் போலத் திருவேடம் உடையரேனும் அக்குன்றிமணியின் மூக்கு கருத்து இருப்பது போல, அவர்தம் அகத்தில் கருப்பு இருக்கும். o t شست- مس سگح سس ۶ و அகநலம் குறைந்த நிலையை 'அகம் குன்றியது” என்றார்.277. 278. மனத்தது மாசுஆக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாநதர பலர. மனத்தின் கண் குற்றமுடையோராகவும், புறத்தில் மாண்புடையோர் தன்மையைக் கொண்டும் ஒழுகுபவர் பலர். புறத்தில் கொண்டொழுகும் ஒழுங்குகள் அகத்தின் ஒழுக்கத்திற்கும் காரணமாய் அமைவன.காரண காரிய மாறுபாடுகள் பொய்ம்மையைக் காட்டுவன. - 278. 279. கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன வினைபடு பாலால் கொளல். அம்பு, தோற்றத்தில் செம்மையான நேர் வடிவினது. ஆனால் செயலால் கொடியது. யாழ் தோற்றத்தில் வளைகளைக் கொண்டது, செவ்வியதன்று, ஆனால் செயலில் இசை இன்பம் தருவது, செவ்வியது. யாரையும் ஆராய்ந்து தெளிதல் அவர்தம் செயல்களைக் கொண்டேயாம் என்பதறிக. 279. 280. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். தலை உரோமங்களை மழித்து மொட்டையும் போட வேண்டாம். உரோமங்களை நீட்டி வளர்த்தலும் வேண்டாம். உலகம் பழிக்கக்கூடிய பழக்கங்களை விட்டொழித்தால் போதுமானது. தீய பழக்கங்கைைள விட்டொழிக்கும் முயற்சிக்குத் துணையே மழித்தல்- நீட்டல் முதலிய செய்முறைகள் இவற்றால் உடலுணர்வுகளைக் கட்டுப்படுத்துதலும், மற்றவர்களால் கவர்ச்சிக்கப்படாது ஒதுங்குதலும் நிகழும் என்பது நம்பிக்கை. ஆயினும் நோக்கம் தீயொழுக்கங்களைத் தவிர்த்தலேயாம். 80 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை