பக்கம்:திருக்குறள் உரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் வருத்தும். ஆதலால் இந்த இயற்கை நியதியினை அறிந்து தம் உயிரை நோயினின்றும் பாதுகாத்துக் கொள்ள விரும்புவோர்பிறிதோர் உயிருக்கு நோய் செய்ய மாட்டார். எந்த உயிருக்குத் துன்பம் செய்யினும் அத்துன்பம் தீவினையாகிவந்து பற்றி நின்று வருத்தும் என்பது கருத்து. 33. கொல்லாமை எந்த ஒர் உயிரையும் கொல்லாமை அறம் மேற்கொண்டொழுகுதல் துறவின் ஒழுக்கம்-கடமை. உயிர்க்குலம் அனைத்தும் ஒன்றேயாம். ஆதலால் எந்த ஓர் உயிரையும் உணவின் பொருட்டாயினும் சரி, வேள்வி முதலியன பொருட்டும்கூடக் கொல்லுதல் கூடாது என்பதே திருக்குறள் முடிவு. அயல் வழக்கில் உயிர்க்கொலை செய்யும் வேள்வியை மறுத்ததாயிற்று. உணவின் பொருட்டுக் கூட துறவிகள் உயிர்க்கொலை (ஓரறிவுயிர்களைக் கூட - தாவரங்களைக் கூடக் கொல்லக்கூடாது.) அதனால் தான் துறவியர் உணவு பழங்களாயிற்று. கொல்லாமையின் அவசியத்தை உணர்தல் அவசியம். உயிர்க்குல அமைப்பில் ஒர் உயிர், பிறிதொருயிர்க்கு இசைந்து ஒத்துழைத்து உதவிபெறும் நிலையில் வாழும் இயல்பில் அமைந்த இயற்கையின் நுட்பத்தை அறிய வேண்டும். எந்த ஒர் உயிருக்கும் நேரடியாகக் கொலை வழி உணவு அமைதல் - பயன்படுதல் இயற்கை நியதியன்று. மீனை எடுத்துக் கொள்ளுங்க்ள். தண்ணிரில் உள்ள அழுக்குகளைத் திண்று தண்ணீரின் தூய்மைக் கேடுகளை நீக்கி தூய்மையான தண்ணீர் தந்து உதவுவதே மீனின் வாழ்க்கையமைப்பு முறை.மீனை உணவாக மாற்றினால் தண்ணீரின் துய்மைப் பணிக்கு இடையூறு ஏற்படுகிறது. அது மட்டுமல்ல, தன்னால் உருவாக்க இயலாத ஒன்றை அழிக்க மனிதனுக்கு உரிமை இல்லை என்பது அறிவியல் நியதி. இயற்கை நியதி. ஆதலால், கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுதல் பேரறம். துறவிகள் துளியும் பிறழாது நின்று ஒழுக வேண்டிய நெறி. ஆயினும் இல்லறத்தார்க்கு இல்லையென்று கொள்ளுதல் கூடாது. இல்லறத்தார்க்கும் பொதுவகையில் கொல்லாமை விதிக்கப்பட்ட அறமேயாகும். 321. அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். அறச் செயல் எது எனக் கேட்பின் கொல்லாமையேயாம். கொலை செய்தல் ஒன்றின் மூலமே பல தீவினைகளுடைய பயன் வந்து சேரும். ஒரே அறத்தினை உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் வலியுறுத்திய அருமைப்பாட்டை அறிக. 321 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 93