பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் அதிகாரம் 51

அற்றாரைத் தேறுதல் ஒம்புக; மற்று அவர் பற்று இலர்; நானார் பழி. 506 சுற்றத்தார் தொடர்பு இல்லாதவர் பற்று இல்லாதவர்; பழிக்கு அஞ்சாதவர்; அப்படிப்பட்டவரை நம்பக் கூடாது.

காதன்மை கந்தா, அறிவு அரியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும். 507 தனக்குப் பிரியமானவர் என்ற காரணத்துக்காக மட்டும், தெரிந்து கொள்ள வேண்டியவைகளைச் சரிவரத் தெரிந்து கொள்ளாதவரை நம்பி காரியத்தை அவரிடம் ஒப்படைப்பது, எல்லா வகையாலும் அறியாமையால் வரும் துன்பத்தைத் தரும்.

தேரான், பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். 508 ஒருவனுடைய குணநலன்களை ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல், அவனிடம் நம்பிக்கை கொள்ளுவது, தனக்கு மட்டும் அல்லாமல், தன்னுடைய தலைமுறையினருக்கும் தீராத துன்பத்தைத் தரும். தேறற்க யாரையும், தேராது; தேர்ந்த பின், தேறுக, தேறும் பொருள். 509 ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் எவரையும் நம்பி விடக் கூடாது. ஆராய்ந்த பிறகு, அவருடைய திறமைக்குத் தகுந்த காரியத்தை நம்பி அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தேரான் த்ெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும், தீரா இடும்பை தரும். 510 ஆராயாமல் ஒருவனை நம்புவதும், நம்பிய பிறகு, அவனிடம் சந்தேகம் கொள்வதும் தீராத துன்பத்தைத் தரும்.

409