பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியியல் அதிகாரம் 99

‘சால்பிற்குக் கட்டளை யாது?’ எனின், தோல்வி துலை அல்லார்கண்ணும் கொளல். 986 நல்ல குணத்தை அறிவதற்கு மதிப்பிடும் உரைகல் எது என்றால் தன்னைவிடத் தாழ்ந்தவரிடத்திலும் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொள்ளும் குணம். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால், என்ன பயத்ததோ, சால்பு? 987 தனக்குத் துன்பம் செய்தவருக்கும் அன்பு காட்டாவிட்டால் சான்றோரின் நல்ல குணத்தால் என்ன நன்மை? இன்மை ஒருவற்கு இளிவு அன்று-சால்பு என்னும் திண்மை உண்டாகப்பெறின். 988 நல்ல குணம் என்னும் வலிமை அமையப் பெற்ற ஒருவருக்கு, இல்லாமை என்னும் வறுமை இகழ்ச்சி தரக்கூடியது அல்ல. 988 ஊழி பெயரினும், தாம் பெயரார்-சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார். 989 நல்ல குணங்களுக்குக் கடல் என்று புகழப்பட்டவர், உலகமே அழியும் காலம் நேர்ந்தாலும் தம்முடைய உறுதியான நிலையிலிருந்து மாறமாட்டார். சான்றவர் சான்றாண்மை குன்றின், இரு நிலம்தான் தாங்காது மன்னோ, பொறை ! 996 நல்ல குணங்கள் நிறைந்த சான்றோரின் தன்மை குறைபடுமானால், பரந்த இந்தப் பூமி தன்னுடைய பாரத்தைத் தாங்க முடியாமல் வருந்தும். சான்றோரின் அறிவுரைகளால் உலக மனித சமுதாயம் சீர் பெறுகின்றது. அத்தகையோர் நன்மை இழந்தால், கெட்டவர்கள் தொகை அதிகரிக்கும். ஆனால் உலகம் துன்பம் அடையும்.

205