பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

105. நல்குரவு

(வறுமையால் ஏற்படும் துன்பம்)

‘இன்மையின் இன்னாதது யாது? எனின்,இன்மையின் இன்மையே இன்னாதது. 1041 வறுமையைப் போல் துன்பம் எது என்று கேட்டால், வறுமையைப் போல துன்பம் தருவது வறுமையே தவிர வேறு ஒன்றும் இல்லை.

இன்மை என ஒரு பாவி, மறுமையும் இம்மையும் இன்றி, வரும். 1042 வறுமை என்னும் பாவி, ஒருவனை அண்டினால், அவனுக்கு இந்த உலகத்திலும், வேறு உலகத்திலும் இன்பமும், மகிழ்வும் இல்லாமல் போகும்.

தொல் வரவும் தோலும் கெடுக்கும், தொகையாகநல்குரவு என்னும் நகை. 1043 வறுமை என்றும் ஆசை ஒருவனைப் பிடித்து விட்டால், தொன்றுதொட்டு வந்த அவனுடைய குடும்பச் சிறப்பும், புகழும் கெட்டு விடும்.

இற்பிறந்தார்கண்ணேயும், இன்மை, இனி வந்த சொல் பிறக்கும் சோர்வு தரும். 1044 வறுமையானது, உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவரிடத்திலும் அவமானத்தை உண்டாக்கும் வார்த்தை.பேசக் கூடிய பலவீனத்தை உண்டாக்கும். நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். 1045 வறுமை என்று சொல்லும் துனபமான ஒரு நிலைமையில் பலவகையான துன்பங்களும் ஏற்பட்டு வளரும்.

216