பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை இன்பம்

இப்போது என்னைப் பிரிந்து சென்றிருக்கிறார் என்பதால் பலர் பரிகாசம் செய்வதற்காக நான் பயந்துவிடலாமா? தாம் வேண்டின் நல்குவர், காதலர் யாம் வேண்டும் கெளவை எடுக்கும், இவ் ஊர். 1150 ஊரார் எங்கள் காதலைப் பற்றி ஏளனம் செய்ய முற்பட்டு விட்டனர். நான் விரும்பியதும் அதையேதான் ஏன் என்றால், அந்த ஏளனப் பேச்சை தடுக்கவாவது இனிமேல் என் காதலர் வந்து என் கவலையைத் தீர்ப்பார்.

2. கற்பு இயல் 116. பிரிவு ஆற்றாமை (காதலன் பிரிவை அவள் தாங்க

முடியாமல் கூறுவது)

செல்லாமை உண்டேல், எனக்கு உரை; மற்று நின் வல்வரவு, வாழ்வார்க்கு உரை. 1151 என்னை விட்டுப் பிரிந்து செல்வதைத் தவிர, வேறு செய்தி இருப்பின் சொல்லுங்கள். பிரிந்து போய், விரைவில் வந்து விடுவேன் என்பதை எல்லாம், உங்களைப் பிரிந்து, உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்ப வளிடம் வந்து சொல்லிக் கொள்ளுங்கள். (அதாவது அவன் பிரிந்து போனால் அவள் உயிர் போய்விடுமாம்.) இன்கண் உடைத்து அவர் பார்வல்; பிரிவு அஞ்சும் புன்கண் உடைத்தால், புணர்வு. 1152 முன்பெல்லாம் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதே எனக்கு இன்பமாக இருந்தது. இப்பொழுதோ, அவருடைய சேர்க்கைகூட, பிரிவை நினைத்து வருந்தும் துன்பத்தைத் தரக்கூடியதாக உள்ளது.

240