பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை இன்பம்


ஒஒ, இனிதே!-எமக்கு இந் நோய் செய்த கண் தாஅம் இதற்பட்டது. 1176 இந்தக் காம நோயானது, கண்ணால் பார்க்க வந்தது தானே! அப்படியிருக்க, நான் மட்டும் ஏன் துன்பப்பட வேண்டும்? என்னைப் போல, என் கண்களும் துன்புறுவது மிகச் சரியானதே!

உழந்து உழந்து உள் நீர் அறுக-விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் ! 1177 அவரைத் தேடித் தேடிப் பார்த்து அன்று மகிழ்ந்த கண்கள் தானே இவை இன்று அவர் இல்லாத துன்பத்தை நினைத்து, அழுது அழுது கண்ணி வற்றிப் போகட்டுமே அதனால் எனக்கு என்ன?

பேணாது பெட்டார் உளர்மன்னோ-மற்று அவர்க் காணாது அமைவு இல கண். II?& உள்ளத்தால் என்னை விரும்பாமல், உதட்டளவில் பொய் உறவு கொண்டாடியவர். எங்கோ இருக்கின்றார். அத்தகைய காதலரைக் காணாமல், என் கண்கள், உறக்கம் இல்லாமல் அமைதி இன்றி தவிக்கின்றனவே!

வாராக்கால், துஞ்சா; வரின், துஞ்சா; ஆயிடை ஆர் அஞர் உற்றன, கண். 179 காதலர் வரவில்லை என்றால் கண்கள் துங்குவதில்லை; அவர் வந்து விட்டாலும் துங்குவதில்லை; அதனால், இந்தக் கண்களால் எனக்கு எப்போதும் துன்பமே நேரிடுகின்றன. -

மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால்-எம்போல் அறை பறை கண்ணார் அகத்து. 1180. முரசு கொட்டி முழங்குவது போல், நான் படும் துன்பத்தை ஊரில் உள்ளவர்களுக்கு வெளிப்படுத்தும் கண்களை உடைய என்னைப் போன்றவர்களுக்கு மறைக்கக் கூடிய ரகசியச் செய்தி இருக்குமா? கண் ஒன்று போதுமே காட்டிக் கொடுத்துவிட:

246