பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் அதிகாரம் 127

பல மாயக் கள்வன் பனிமொழி அன்றோ-நம் பெண்மை உடைக்கும் படை! #253 பெண்ணின் கட்டுப்பாட்டை உடைத்து, அழிக்கின்ற ஆயுதம் என்ன என்றால், பல பொய்களைப் பேசுவதில், வல்லவரான உள்ளம் கவர் கள்வரான காதலரின் பணிவான சொற்களே அல்லவா?

‘புலப்பல்’ எனச் சென்றேன்; புல்லினேன், நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. 2 என் காதலர் வந்ததும், அவரோடு இணங்குவதில்லை. ஊடுவதே சரி என்று நினைத்துத்தான் சென்றேன். ஆனால், அவர் வந்ததும் என் நெஞ்சமோ, என்னை விட்டு அவரோடு சேர்ந்துவிட்ட பிறகு, நான் என்ன செய்வேன்? எனவே, அவரைத் தழுவிக் கொண்டேன். நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோபுணர்ந்து ஊடி நிற்பேம் எனல்?- H250 தீயில் இட்ட கொழுப்பைப்போல உருகும் உள்ளம் கொண்ட என் போன்ற பெண்களுக்கு, காதலரை எதிரே கண்டபிறகு, கூடாமல் ஊடி நிற்பது என்பது நடக்கக் கூடிய செயலா?

127. அவர்வயின் விதும்பல்

காணவேண்டிய வேட்கையில் காதலி

கூறிவதி: வாள் அற்றுப் புற்கென்ற, கண்ணும்; அவர் சென்ற நாள் ஒற்றித் தேய்ந்த, விரல். H.261

என் காதலர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளி இழந்து, அழகை இழந்தன. அவர் பிரிந்து சென்ற நாள்களைச் சுவரில் குறிவைத்துத் தொட்டு, எண்ணுவதால், என் விரல்களும் தேய்ந்து போய் விட்டன. 263