பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் அதிகாரம் 16

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். 156 தீங்கு செய்தவருக்கு உடனே, பதிலுக்கு தீங்கு செய்வதால் அப்போதைக்கு இன்பம் ஏற்படும். ஆனால், அதைப் பொறுத்துக் கொண்டவருக்கு உலகம் உள்ளவரை புகழ் உண்டு.

திறன் அல்ல தன்-பிறர் செய்யினும், நோ நொந்து, அறன் அல்ல செய்யாமை நன்று. 157 செய்யத்தகாத தீங்கை ஒருவன் தனக்குச் செய்தாலும், அதனால் அவனுடைய செயலுக்கு வருந்தி, தீய செயல் எதையும் அவனுக்குச் செய்யாமல் இருப்பது நல்லது.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம் தகுதியான் வென்றுவிடல் ! 158 ஒருவன் கர்வத்தால் தீங்கைச் செய்தாலும் அவனைத் தன்னுடைய மிகுந்த பொறுமையால் வெற்றி கொள்ள வேண்டும்.

துறந்தாரின் துய்மை உடையர்-இறந்தார்வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர். 159 தீயவழியில் நடப்பவரின் வாயிலிருந்து வரும் கடும் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறவியரைப் போல் மேலானவர்.

உண்ணாது தோற்பார் பெரியார்-பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின். 160 உண்ணாமல் தவம் இருப்பவர் கூட, பிறர் கூறும் கடும் சொற்களைப் பொறுத்துக் கொள்கின்றவருக்கு அடுத்த நிலையில்தான் பெரியோர் ஆவார்.

39