பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் அதிகாரம் 19

பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும். 186 மற்றவனைப் பற்றி பழி கூறுகிறவன், தன் குற்றங் களையும் ஆராய்ந்து, அவ்வாறு மற்றவர் பழித்துக் கூறுவதற்கு ஆளாவான்.

பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்-நகச் சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர். 187 மகிழ்ச்சியோடு பேசி, நட்புக் கொள்ளும் நன்மை அறியாதவர் ஒருவரோடு ஒருவர் சேராதபடி கோள் சொல்லி, நண்பரையும் பிரித்து விடுவார்.

துன்னியார் குற்றமும் குாற்றும் மரபினார், என்னைகொல், ஏதிலார்மாட்டு? 188 நண்பர்களின் குற்றத்தையும், கோள் சொல்லித் திரிகின்ற இயல்புள்ளவர் முன்பின் அறியாதவர்களை என்ன செய்ய மாட்டாரோ?

அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம்-புறன் நோக்கிப் புன் சொல் உரைப்பான் பொறை? 189 ஒருவன் இல்லாத நேரம் பார்த்து, அவனைப் பற்றி பழி சொல்லுகிறவனுடைய உடல் பாரத்தையும், இந்தப் பூமி சுமந்து கொண்டிருப்பது தன் கடமையைக் கருதியோ? -

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின், தீது உண்டோ, மன்னும் உயிர்க்கு? 190 மற்றவருடைய குற்றத்தைக் காண்பது போல், தன்னுடைய குற்றத்தையும் கண்டு திருத்திக் கொள்ள முடியுமானால் மனித வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?

45