பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் அதிகாரம் 22

பயன் மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால்-செல்வம் தயன் உடையான்கண் படின். 216 தாராளத் தன்மையால் உபகாரம் செய்பவனிடம் செல்வம் உண்டானால் அது ஊர் நடுவில் பழுத்துத் தொங்கும் பயன்தரும் மரம் போன்றது.

மருந்து ஆகித் தப்பா மரத்தற்றால்-செல்வம் பெருந்தகையான்கண் படின். 217 பெருந்தன்மை மிகுந்தவனிடம் செல்வம் சேர்ந்திருப்பது, இலை, பூ, விதை, காய், பழம், பட்டை, வேர் முதலியன மருந்தாகிப் பயன் தருகின்றன மரம் போன்றது.

இடன் இல் பருவத்தும், ஒப்புரவிற்கு ஒல்கார்கடன் அறி காட்சியவர். 2f& உதவி செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வுள்ள அறிவு உடையோரிடம், செல்வ வளம் குறைந்த போதிலும் உதவிபுரியத் தயங்க மாட்டார்.

நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர செய்யாது அமைகலா ஆறு. 219 நல்ல பண்பு உடையவன் வறுமையால் வருந்துகிறான் என்றால், பிறருக்கு உதவ முடியவில்லையே என்று அவன் படுகிற துன்பம் தான்.

‘ஒப்புரவினால் வரும், கேடு எனின், அஃது ஒருவன் விற்றுக் கோள் தக்கது உடைத்து. 220 பிறருக்கு உதவுகிறதால் ஒருவனுக்குக் கேடுவரும் என்றால், அக்கேடு தன்னை விற்றாவது அவன் வாங்கிக் கொள்ளும்படி தகுதி உடையது ஆகும்.

51