பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T06 - திருக்குறள் கதைகள் பதிலாக அவன் பார்வையைக் கொண்டு போய்விட்டது ' என்று கூறினர். இந்தப் பேரதிர்ச்சியைத் தாங்கமுடியாத தேவகி அப்படியே மூர்ச்சையுற்றுக் கீழே சாய்ந்தாள். சுந்தர மூர்த்தி பிரமை பிடித்தவர்போல் சிலையாக ஸ்தம்பித்து நின்ருர். ஆண்டவனுடைய சோதனையை யாரால் தடுத்து நிறுத்த முடியும் ? - - பார்வை இழந்துவிட்ட கண்ணன் தட்டுத் தடுமாறிய படியே வீட்டுக்குள் வளையவரத் தொடங்கின்ை. ஆனல் தனக்குக் கண்ணே தெரியவில்லை என்னும் செய்தியைத் தன் வாயால் சொல்லித் தாய் தந்தையாரைத் துன்பத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை அவன். 'பிறவி முதல் இருளையே விரும்பாத குழந்தை இனி என் றென்றும் நிரந்தரமான இருளிலேயே வாழவேண்டியதாகி விட்டதே' என்று பெற்றேர்கள் கண்ணிர் வடித்தார்கள். ஆனால், அந்தக் குழந்தையோ தன்னைப்பற்றித் துளியும் வருத் தப்படவில்லே. எப்போதும்போல் அந்தக் குழந்தையின் முகத்தில் புன்னகை தவழ்ந்து விளையாடிக்கொண்டுதான் இருந்தது. இனி அவன் வாழ்வில் இருள் ஏது? - அருள் பொருந்திய நெஞ்சம் உடைய அக்குழந்தைக்கு இப்போது இருள் என்பதே தெரியவில்லை. இருளிலேயே ஒளியைக் காணும் தெய்வக் குழந்தையாகிவிட்டான் அவன் !