பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு 13

ஒரு முறுவலைக் கண்டதில்லை. அவர் நாவிலிருந்து ஒர் அன்புச் சொல் வெளி வந்து அறிந்ததில்லை. உலக வாழ்க்கை யையே முற்றிலும் வெறுத்தவர் போல் காணப்பட்டார் அவர். அதற்கு என்ன காரணம் ? அவருடைய சுபாவமே இப்படித்தானே? அன்பு என்பதே அவர் உள்ளத்தில் துளியும் கிடையாதோ ? - ராஜாமணிக்கும் கல்யாணிக்கும் அப்பாவின் அதிசய மான போக்கு ஒரு புரியாத ரகசியமாகவே இருந்தது. கூடத்தில் அப்பா கனக்கும் சப்தம் கேட்டது. இருவரும் பேச்சை நிறுத்திவிட்டார்கள். - மணி பத்து. ராஜாமணியும் கல்யாணியும் ஆபீசுக்குப் புறப்பட்டு விட்டார்கள். கார்னேஷன் சைக்கிள் தொழிற்சாலையில் கல்யாணி ஒரு டைப்பிஸ்ட் நடராஜன் ஒரு சூப்பரிண்டென்ட். அவனு டைய சந்தன மேனியையும், சுருட்டை மயிரையும் முதல் முதலாகப் பார்த்தபோதே கல்யாணி தன் இதயத்தை அவனுக்குப் பறி கொடுத்துவிட்டாள். நடராஜனும் அப் படித்தான். கல்யாணியைக் காணும்போதெல்லாம் அவ லுக்கு என்னென்னவோ கற்பனைகள் தோன்றின. அவள் அருகில் இருக்கும் சமயங்களில் தன் நண்பர்களிடம் ஏதாவது வேடிக்கையாகப் பேசுவான். தன் ஹாஸ்யத்தைக் கல்யாணி ரசிக்கிருளா என்று கடைக்கண்ணுல் கவனிப்பான். கல்யாணி சில சமயம் சிரிப்பாள். சில சமயம் சிரிப்பை அடக்கிக் கொண்டு மெளனமாகத் தன் அப்பா மாதிரி உம் மென்று முகத்தை வைத்துக்கொண்டு விடுவாள். அம்மாதிரி சந்தர்ப் பங்களில் நடராஜன் ரொம்பவும் திண்டாடிப் போவான். கல்யாணிக்கு உண்மையாகவே தன்னிடம் காதல் இருக் கிறதா இல்லையா என்று விளங்கவில்லை அவனுக்கு. ஒரு நாள் அவனைத் தனியாகச் சந்தித்துத் தன் விருப்பத் தைச் சொல்லியே விட்டான். அவளும் அவனிடம் தனக் குள்ள காதலைத் தெரிவித்தாள். அன்று முதல் இருவருடைய நட்பும் படிப்படியாக வளர்ந்து வந்தது. நடராஜனைத் தன் - தி. க.-2