பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு - 15 ' கல்யாணியோடு தான். * என்ன விஷயம் ?” " எனக்கு ஒரு நண்பன் இருக்கிருன். நடராஜன் என்று பெயர். அவனுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை. கல்யாணி வேலை செய்யும் சைக்கிள் தொழிற்சாலையில் தான் அவனும் வேலை பார்க்கிருன். இன்று கல்யாணியின் திருமணம் பற்றி அவனிடம் பேசிப் பார்த்தேன். தனக்குச் சம்மதம்தான் என்றும், தன் தந்தையைக் கேட்டு மற்ற விஷயங்களை முடிவு செய்து கொள்ளும்படியும் கூறினன்.” கல்யாணி மறைந்திருந்தபடி இன் தயெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்பா என்ன சொல்வாரோ ?’ என்று அவள் இதயம் பயத்தில்ை படபடத்தது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அப்பாவின் கண்களில் லேசாக நீர் துளித்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். 'இதென்ன ? அப்பா ஏன் அழுகிருர் ?-அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. மேகநாதன் கேட்டார் : “ நடராஜன அவன் பெயர் : அவன் யாருடைய பிள்ளை என்று சொன்னுய் ?” வெல்ல மண்டி சிவ சங்கரனுடைய பிள்ளை.' : சிவசங்க்ரன? அவனை எனக்கு நன்ருகத் தெரியுமே, ரொம்ப நாள் பழக்கமாயிற்றே ? அது சரி ; கல்யாணியின் கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசரம் ? அந்தக் கவலை இப்போது உனக்கு வேண்டாம் ' என்றர் மேகநாதன். கல்யாணிக்கும் வயதாகி விட்டதல்லவா? அவளும் எத்தனை நாள் கண்ணிப் பெண்ணுகவே காலம் கழிக்க முடியும் ? ஒரு நல்ல இடத்தில் அவளே வாழ வைக்க வேண்டாமா ? தாங்கள்தான் சிவசங்கரனைப் பார்த்துக் கலியானத்தை நிச்சயம் செய்துகொண்டு வரவேண்டும்.' -துணிந்து கேட்டுவிட்டான் ராஜாமணி.

  • நாளு ? நான் போகமாட்டேன் ' என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டார் மேகநாதன். அப்பா கல்யாணி