பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 திருக்குறள் கதைகள் தவற்றை நான் செய்து விட்டேன். ஏன் தெரியுமா? உங்கள் மீது நான் கொண்டுள்ள அன்பு காரணமாகத்தான். நீங்கள் இருவரும் பலதடவைகள் என்னேப்பற்றிப் பேசிக் கொண்டிருந் ததையெல்லாம் நான் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந் தேன். அப்பா ஏன் நம்மிடம் அன்பாயில்லை? என்று ஒவ்வொரு முறையும் நீங்கள் பேசிக் கொண்டபோது என் இதயம் சுக்குது.ாருக வெடித்து விடும்போல் ஆகிவிடும். ஆனல், நான் ஏன் உங்சளிடம் அன்பு காட்டவில்லை என் பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் அவஸ்தைப் படுவேன். . அதற்கு என்ன காரணம் தெரியுமா? உங்கள் இருவரிட மும் எனக்கிருந்த அளவற்ற அன்புதான். நான் உங்களிடம் கொண்டிருந்த அன்புக்கு இணையாக இந்த உலகத்தில் வேறு எதையுமே சொல்லிவிட முடியாது. ஆயினும் என் உள்ளத்திலிருந்த அன்பு நீறுபூத்த நெருப் பாகவே மறைந்து கிடந்தது. வெளித் தோற்றத்துக்கு அன்பில்லாதவனைப்போலவே நடந்துகொண்டேன். அதனல் நீங்கள் இருவரும் என்னே இதயமற்றவன் என்றுகூட எண்ணி விட்டீர்கள். சுவைமிக்க இனிய சுளைகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள பலாப்பழம் வெளிப்புறத்தில் ஒரே முள்ளாகத் தோற்றமளிக்கவில்லையா ? அதைப் போலவே தான் என் வெளித் தோற்றத்தைக் கண்ட நீங்களும் என் உள்ளத்தில் அடங்கிக் கிடந்த அன்பை அறிய முடியா தவர்களாக இருந்தீர்கள். ஆனல், உங்கள் இருவருக்காகவே இதுவரை நான் உயிர் வாழ்ந்தேன். என் அன்பையெல் லாம் உங்களிடமே செலுத்திக் கொண்டிருந்தேன். வெளிப் படையாக அல்ல மறைமுகமாகத் தான். அந்த ரகசிய அன்புக்குக் காரணம் என்னவென்று உங்களுக்கு விளங்கவில்லே அல்லவா? என் அருமைக் குழந்தை களே! சொல்கிறேன் கேளுங்கள்: இந்த உலகத்தில் நான் யார் மீதெல்லாம் அன்பு பாராட்டினேனே, அவர்களேயெல் லாம் நான் இழந்துவிட்டேன். அல்லது அவர்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு துன்பம் நேர்ந்து கொண்டிருந்தது. என் னுடைய அன்பின் சக்தி அத்தகையது.