பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ੋ | பெரிய கடை வீதிப்பக்கம் போகிறவர்கள் யாராயிருந்: தாலும் ராயர் கிளப்புக்குள் நுழையாமல் திரும்பமாட் டார்கள். பசியே இல்லாதவர்கள்கூட அந்தக் கிளப்புக்குள் நுழைந்து ஒரு கப் காபியாவது சாப்பிட்டால்தான் திருப்தி அடைவார்கள். ராயர் கிளப்பிவிருந்து வீசும் வெங்காய வடையின் 'கம் மென்ற வாசனை வீதிவழியே செல்கிறவர்களைக் கவர்ந்து இழுக்கும். ... * . . . - - கிளப்புக்குள் நுழைந்து விட்டாலோ முதலாளி முகுந்த ராவின் உபசாரம் நம்மைத் திணற அடித்துவிடும். . 'அண்ணு, அண்ணு ' என்று அவர் கிளப்புக்கு வருகிற. வர்களே அன்போடு அழைக்கும்போது அந்தக் குரலில் குளுமை இருக்கும். இனிமை இருக்கும், பண்பு இருக்கும், மரியாதை இருக்கும், உபசார இருக்கும்.