பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருக்குறள் கதைகள் என்னும் சிரமபரிகார உச்சரிப்பும் கேட்போரின் உள்ளத் தைக் கிளறி விடும். - கையிலே ஜாலரா, தோளிலே பிட்சா பாத்திரம், கழுத் இலே தாமரை மணிமாலே, நெற்றியிலே அட்சதைத் திலகம், த&லயிலே தியாகய்யரைப்போல் போர்த்திக் கட்டப்பட்ட வஸ்திரம், கக்கத்திலே குறுக்குக் கம்பிகளெல்லாம் இற்று. வெலெத்துப்போன கறுப்புக் குடை. பாடிக்கொண்டே, ஜாலராவைத் தட்டிக்கொண்டே, இருமிக்கொண்டே, தளர் நடை போட்டுக்கொண்டே ஊர் ஊராய்த் தெருத் தெருவாய்ச் சுற்றி அலைந்து உஞ்சவிருத்தி மூலம் கிடைக்கும் அரிசியைக்கொண்டு அன்ருடக் காலட் சேபத்தை நடத்தி வந்தார் அந்தத் தொண்டு கிழவர். அலைந்து திரிந்து சேகரித்துக் கொண் டு போ கும். அரிசியைப் பொங்கிப்போட அவருக்கு இந்த உலகத்தில் ஒருவருமே இல்லை. , . * தனித்து உழலும் ஒரு திக்கற்ற ஆத்மா அவர். பட்டிபுரம் கிராமத்துத் தெருவில் நடந்து வரும்போது அவர் கால்கள் தாமாகவே ஒரிடத்தில் வழக்கமாக நின்று விடும். - அவர் நிற்கும் அந்த இடத்துக்கு எதிரில்தான் அந்த பிராஞ்சு தபாலாபீஸ் இருந்தது. உள்ளே போஸ்ட் மாஸ்டர் வராகாச்சாரி அன்று வந்த தபால்களே லார்ட்' செய்துகொண் டிருப்பார் : அல்லது * கடக் சடக் என்று முத்திரை குத்திக் கொண்டிருப்பார் : அல்லது ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார் ; அல்லது. தெருத் திண்ணையில் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும். பள்ளிக்கூடப் பிள்ளைகளே உள்ளிருந்தபடியே அதட்டி அடக்கிக் கொண்டிருப்பார். - சிற்சில சமயங்களில் திண்ணைtது வந்து கால்மேல் கால். போட்டபடி, வெற்றிலேயை மடித்துப் போட்டவண்ணம் உலகத்தையே துரும்பாக மதிக்கும் பாவனையில் அமர்ந்திருப் it #7 for .