பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருக்குறள் கதைகள் வேலையாயிருப்பான். ஒரு நாளைக்கு எனக்கு மணியார்டர் அனுப்புவான் !' சீதாராமய்யா தம் பேரனிடம் திடமான, உறுதியான, மாருத, மாற்றமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார். * → அந்த நம்பிக்கையின் பேரில்தான், எனக்கு ஏதாவது மணியார்டர் உண்டா?’ என்று ஒவ்வொரு நாளும் வரா காச்சாரியைக் கேட்டுக் கொண்டிருந்தார். - அன்று பொழுது விடிந்ததும் சீதாராமையா வெளியே புறப்பட்டார். நாலு தெருக்கள் சுற்றிவிட்டு, தபாலாபிஸ் தெருவுக்கு வந்தார். தபாலாபீசை அடைந்ததும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். வழக்கம்போல் ' எனக்கு ஏதாவது மணியார்டர் உண்டா? என்று கேட்டார். குனிந்தபடி ஏதோ கவனமாக எழுதிக் கொண்டிருந்த வராகாச்சாரி எரிச்சலுடன் திரும்பி, போமய்யா, வேலைமெனக்கட்டவரே : மணியார்டரும் இல்லே, மண்ணுங் கட்டியும் இல்லே ' என்று சீறி விழுந்தார். - வராகாச்சாரியின் சுபாவம் அறிந்த சீதாராமய்யா அவர் கோபத்துக்காகச் சிறிதும் வருத்தப்படவில்லை. அவருடைய வருத்தமெல்லாம் அன்றும் தனக்கு மணியார் டர் வரவில்லையே என்பதுதான். - 'நாராயணு எத்தனை காலத்துக்கு நான் இப்படிக் கஷ்டப்பட வேண்டும்? என் பேரன் மணியார்டர் அனுப் பவே மாட்டான ? என் கஷ்டம் தீரவே தீராதா ? நான் என்றென்றைக்கும் நடந்து நடந்து, உடல் மெலிந்து உயிரை விட வேண்டியதுதான? - கிழவர் தள்ளாடித் தள்ளாடி நடந்தார். - - மண் பதினென்று இருக்கும் ; நல்ல வெயில். களேப்புத் தாங்காமல் சாலை ஓரத்திலுள்ள பாழடைந்த அநுமார் கோயில் மண்டபத்தில் போய்ப் படுத்துக் கொண்டார். சோர்வின் மிகுதியால் அவர் கண்கள் குழி விழுந்து கிடந்தன. படுத்தவர் அப்படியே அயர்ந்து துாங்கிவிட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் விழித்துக் கொண்டு எழுந்தவர், காலின் கீழ் வழ வழி வென்று ஏதோ நெளிவதுபோல் உணர்ந்: தார். சட்டென்று கால் உதறிவிட்டுக் கீழே பார்த்தார்.'