பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Сдѣпіопа? . 43. 'கால் கடுக்க அலைஞ்சதுதான் மிச்சம். கேட்ட இடத்தி: லெல்லாம் கையை விரிச்சுட்டாங்க ' என்று சோகம் ததும்பக் கூறினர் ராமண்ணு. - . இந்தாங்க, இந்த மூக்குத்தியைக் கொண்டுபோய் அடகுக் கடையிலே வெச்சுப் பணம் வாங்கிட்டு வாங்க. தஞ்சாவூருக்குப் போய் வந்ததும் மீட்டுக்கலாம் ' என்று. தன்னுடைய மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாள் தங்கம்மாள். ராமண்ணு அதை அடகுக் கடைக்கு எடுத்துக்கொண்டு. போய்ப் பத்து ரூபாய் பணம் வாங்கி வந்தார். ஏழு ரூபாயை மனைவியிடம் கொடுத்துவிட்டு, மூன்று ரூபாயைப் பஸ் சார்ஜுக்கு வைத்துக் கொண்டார். அவரிடம் ஒரே ஒரு சட்டைதான் இருந்தது. அதுவும் நைந்துபோன ஒரு பழைய சட்டை முதுகுப் பக்கத்தில் கிழிந்து போயிருந்தது. அதை எடுத்துத் துவைத்தபோது கிழிசல் இன்னும் பெரி தாகி விட்டது. அவர் மனைவி அடுத்த வீட்டிலிருந்து நூலும் ஊசியும் வாங்கி வந்து அதைத் தைத்துக் கொடுத்தாள். மறு நாள் காலை. ராமண்ணு துவைத்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு அந்த மூன்று ரூபாய்களுடன் பஸ்ஸுக்குப் புறப் பட்டார். அப்போது வாசலில் கூடை வியாபாரி ஆரஞ்சுப் பழம் என்று கூவிக்கொண்டே போனன். ராமண்ணுவின் பெண் குழந்தைகளில் ஒன்று ஓடி வந்து, அப்பா ! எனக்கு, ஆரஞ்சுப் பழம் வாங்கித்தாப்பா என்று கெஞ்சியது. சீ, கழுதை ஆரஞ்சுப் பழமா வேணும் உனக்கு ! இந்தா ஆரஞ்சுப் பழம் ' என்று கூறிக்கொண்டே அந்தக். குழந்தையின் முதுகில் இரண்டு அறை வைத்து விட்டார். அன்றிரவு தஞ்சாவூரில் நடைபெற்ற ஸ்பெஷல் நாடகத்தில் ராமண்ணு அரண்மனை விதுரஷகளுக வேடம் தாங்கினர். ஒரு காட்சியில் அரசன், விதுாஷகனிடம் மூன்று ஆரஞ்சுப் பழங்களே உரித்துக் கொடுத்து, அந்தப் பழங்கள் மூன்றையும் அப்படியே முழுசாக விழுங்கும்படி கட்டளை இட்டார். * *