பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருக்குறள் கதைகள் விதுரஷகன் திருதிருவென்று விழிப்பதைக் கண்ட ராஜா, விதூஷகரே, விழுங்கப் போகிறீரா இல்லையா?” என்று மிரட்டினர். அரசனுடைய உத்தரவுக்கு அஞ்சிய விது.ாஷகர் பழங்களை எடுத்து ஒவ்வொன்ருக விழுங்கினர். அப்போது கொட்டகை யில் எழுந்த கரகோஷம் கூரையையே பிய்த்துக்கொண்டு போயிற்று ! ராமண்ணுவின் கண்களில் கண்ணிர் துளித்தது. காரணம் ? - அன்று காலே அவருடைய குழந்தைகளில் ஒன்று, ஆரஞ்சுப் பழம் வாங்கித் தரும்படி அழுது பிடிவாதம் செய்தபோது அவர் அதன் முதுகில் இரண்டு அறைகள் வைத்துவிட்டு வந்தாரல்லவா ? என் குழந்தை ஆரஞ்சுப் பழம் கேட்டது. என்னுல் வாங்கித் தர முடியவில்லை. இங்கே நாடக மேடையில் ஆரஞ் சுப்பழம் தின்னும்படி அரசன் என்னே வற்புறுத்துகிருன். என் குழந்தைகள் ஆசைப்பட்டுக் கேட்ட ஆரஞ்சுப் பழங் களே நான் விழுங்க வேண்டியிருக்கிறதே !’-கண்ணிரைத் துடைத்துக் கொண்டார் ராமண்ணு. நாடகம் முடிந்தது. - பளபளக்கும் பட்டு அங்கிகளைக் கழற்றிவிட்டு, தமது பழைய கந்தல் சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டார் ராமண்ணு. ராஜபார்ட் ரங்கப்பா கொடுத்த பதினைந்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஊருக்குத் திரும்பி வந்தார். . முக்குத்தி ...... அதை மீட்கவே முடியவில்லை. அதற்குள் எத்தனையோ பிடுங்கல்கள் ! - ராமண்ணுவின் வாழ்க்கை இன்று நேற்று மட்டும் இப்படி நடக்கவில்லை. அவர் கோமாளி வேஷம் போடத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்தக் கதிதான்.