பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருக்குறள் கதைகள் இல்ல காய்ச்சல் கண்டுவிட்டது. ராமண்ணு கலங்கிவிட்டார். அவர் மனைவி கை வைத்தியமாக ஏதேதோ செய்து பார்த் இாள். எதற்கும் ஜூரம் குறையவில்லை. இரண்டு நாட்கள் &டந்தன. மகன் படுத்த படுக்கையாகவே கிடந்தான். டாக் டரை அழைத்து வந்து வைத்தியம் செய்ய வசதியில்லாத ராமண்ணு, மனக் கவலையோடு இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தார். மூன்ரும் நாள் சற்று ஜூரம் குறைந்தது. இந்தச் சமயத்தில் ராமண்ணுவுக்கு ஒரு கடிதம் வந்தது. :ாஜபார்ட் ரங்கப்பாதான் எழுதியிருந்தார். மதுரையில் சேர்ந்தாற்போல் ஏழு நாடகங்களுக்கு ஏற்பாடாகி யிருக் இலதென்றும், மொத்தத்துக்கும் சேர்த்து நூறு ரூபாய் இருவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத் இடன் மதுரையில் நாடக ரசிகர்கள் சங்கத்தில் ராமண்ணு. லின் நடிப்பைப் பாராட்டி ஒரு பொன்னடை போர்த்திக் கெளரவிக்க ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் எழுதியிருந்தார். r ராமண்ணுவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. மனைவியிடம் இடிதத்தைப் படித்துக் காட்டி, 'தங்கம், இத்தனை துன்பங் களுக்கும் நடுவிலே எனக்கு யோகம் அடிக்குது பார்த் இயா?’ என்று சிறு பிள்ளை போல் கூறி மகிழ்ந்தார். ஆமாம் : மதுரைக்குப் போகப் பணத்துக்கு என்ன சேய்யப் போlங்க ? என்று கேட்டாள் தங்கம்மாள். " நாடகக் காண்டிராக்டர் குப்புசாமிப் பிள்ளை இந்த ஊருக்கு வந்திருக்காராம். அவர்தான் மதுரையிலே காண்டிராக்ட் எடுத்திருக்காராம். அவரைப் போய்ப் பார்த்துப் பணம் கேட்டு வாங்கி வரப் போகிறேன்' என்று புறப்பட்ட ராமண்ணு முப்பது ரூபாயுடன் திரும்பிவந்தார். - படுக்கையில் படுத்திருந்த அவர் மகன், அப்பா, பள்ளிக்கூடத்திலே இன்னும் பத்து நாளைக்குள் பணம் கட்டாவிட்டால் பரீட்சைக்கே சேர்த்துக்க மாட்டாங் களாம்' என்று ஈனசுரத்தில் முனகினன்.

  • கவலைப்படாதே தம்பி, மதுரையிலிருந்து திரும்பி வந்ததும் கட்டி விடலாம். இன்னும் பத்து நாள் இருக்கிற