பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமாளி - 47 தில்லையா? அதுக்குள்ளே உனக்கும் உடம்பு குணமாயிடும். தங்கம் இந்தா, இந்த இருபது ரூபாயை வச்சுக்க வைத்தி யரை அழைச்சுக்கிட்டு வந்து தம்பிக்கு மருந்து வாங்கிக் கொடு. அவன் உடம்பை கவனிச்சுக்க. ஜாக்கிரதை "' என்று மனைவியிடம் எச்சரித்துவிட்டு மதுரைக்குப் புறப்பட்டு விட்டார் ராமண்ணு. ஆயினும் அவர் மனத்தில் நிம்மதி இல்லை. அந்தச் சமயம் அவர் மனைவியும் கருவுற்றிருந்தாள். ராமண்ணு எப்படியோ மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு மதுரைக்குப் பயணமாளுர். - மதுரையில் மூன்று நாட்கள் தொடர்ந்தாற்போல் நடைபெற்ற நாடகம், நான்காம் நாள் அடாது மழை பிடித்துக்கொள்ளவே தடைப்பட்டு விட்டது. ஆனால், ராமண்ணுவுக்குப் பொன்னடை போர்த்துவது என்று முடிவு செய்திருந்த மதுரை நாடக ரசிகர் சங்கத்தார் மட்டும் விழாவை நடத்தி விடுவது என்று முடிவு செய்தனர். பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நகரப் பொது மண்டபத்தில் ரசிகர்களும், பொது மக்களும், பிரமுகர்களும், கலைஞர்களும் துளி இடமில்லாதபடி கூடிக் குழுமியிருந்தனர். ராமண்ணுவின் நடிப்புத் திறமைய்ைப்பற்றியும் நாடகக் கலைக்கு அவர் செய்துள்ள சேவையைப்பற்றியும், பலர் வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்ததுடன், அவருக்குப் பொன் ஞடை போர்த்தி, நூறு ரூபாய் பண முடிப்பும் அளித்தனர். ராமண்ணுவின் கந்தல் சட்டையைப் பொன்னடை மறைத்தது. அப்போதும் அவர் சிரிக்கவில்லை. பற்றற்ற துறவி போல் எழுந்து நின்று நகைச் சுவையின் உயர்ந்த தன்மையைப்பற்றிப் பேசினர்: "அந்த அரிய கலை ஒன்று தான் எல்லோரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும் சக்தி படைத்தது. என்னை இத்தனை காலமும் சாகாமல் வாழ வைத்ததும் அந்தக் கலைதான். அந்தக் கலைக்கும் எனக்கும் கெளரவம் அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி' என்று கூறிவிட்டு உட்கார்ந்தார் ஆவர். விழா முடிந்தது.