பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருக்குறள் கதைகள் அம்மா, நான் கலியாணம் செய்துகொள்ளாமல் இருப்பது தங்கள் மனக்குறைக்குக் காரணமாயிருந்தால் சொல்லுங்கள். நான் உடனே மணம் புரிந்துகொண்டு விடுகிறேன். நான் சித்திரம் பயிலுவதற்கு மணவாழ்க்கை இடையூருக இருக்குமே என்பதற்காகவே இதுவரை கலியா ணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இனி அந்தக் குறை தங்களுக்கு வேண்டாம்.' மகனுடைய அன்பும் பாசமும் பாகீரதியின் நெஞ்சத்தை நெகிழ வைத்துவிட்டன. அவள் கண்களிலிருந்து கண்ணிர் கூட வந்து விட்டது. ராஜு பசியோடு வந்திருப்பாய் ; குளித்துவிட்டுச் சாப்பிட வா, எழுந்திரு என்று பேச்சை மாற்றினுள் பாகீரதி. - அப்பா எங்கே ?’’ அவர் சென்னைக்குப் போயிருக்கிருர்: இப்போதெல் லாம் அவர் கிராமத்திலேயே தங்குவதில்லை. புதிதாக சர்க்கரை மில் ஒன்று ஆரம்பிக்கப் போகிரு.ராம். அது சம்பந்தமாக அடிக்கடி பட்டணம் போய் விடுகிருர்' - அப்படியா ? அடிக்கடி சென்னைக்கு வரும் அப்பா என்னை ஏன் ஒரு முறைகூட வந்து பார்ப்பதில்லை?” என்று தனக்குள்ளாக எண்ணிக் கொண்டான் ராஜு. அவன் நந்திவனத்தில் நாலே தினங்கள்தான் தங்கி யிருந்தான்; அதுவும். தாயாரின் ஆசைக்கிணங்கி. இல்லை யென்ருல் மறுதினமே புறப்பட்டுப்போயிருப்பான். - நந்திவனத்துக்குச் சென்று திரும்பியது முதல் அவன் உள்ளத்தில் நிம்மதியே இல்லாமற் போய்விட்டது. அவன் தாயின் அன்பு முகமும், அதில் காணப்பட்ட இனம் தெரி யாத சோகமும் அவன் மனத்திரையில் ஒர் அழியா ஒவிய மாகப் பதிந்துவிட்டன. தாயின் சோகத்துக்குக் காரணம் ? அதைத்தான் அவளுல் ஊகிக்க முடியவில்லை. களை பொருந்திய முகம் : ஒளி வீசும் கண்கள் : மகிழ்ச்சி பொங்கும் மலர்ந்த பார்வை !-இது நான்கு வருடங்களுக்கு முந்திய தன் அன்னையின் தோற்றம் ! இப்போது ? அந்தக்