பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 51. 'பாப்பா! இந்த வெயில்லே நீயா சாப்பாடு எடுத்துக் கிட்டு வந்தே? தார் ரோடிலே கால் சுட்டுப் போயிருக்குமே! ஏன், அந்தக் கிழவிக்கு என்னவாம்? - அன்பும் பாசமும் கனிந்த குரலில் கேட்டான் நாராயணசாமி. 'அதுக்கு ஆட்லே வேலை இருக்குதாம். புள்ளைக்குக் காய்ச்சலாம். வரலேன்னு சொல்லிடுச்சு. அதனலே நான் எடுத்தாந்தேன்' என்ருள் பாப்பா. வேப்ப மரத்துக்குச் சற்றுத் தூரத்தில் காம்பவுண்டுச் சுவர் திருப்பத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கண்ணம்மாவின் முகம் கறுத்துச் சிறுத்தது. இதயத்தில் பொருமைத் தி கொழுந்துவிட்டு எரிந்தது. அவர்கள் இரு வருக்கும் உள்ள உறவின் தன்மையை அறிந்து கொள்ளத் துடித்தாள் அவள். பாப்பா இளையைப் போட்டுப் பரிமாறினுள். அன்று அமாவாசையானதால் வெறும் மரக்கறி உணவுதான். நாராயணசாமிக்கு அவ்வளவாகப் பிடித்தமில்லாத சாப் பாடு. அவன் புட்டியில் நிரப்பிக்கொண்டு வந்திருந்த தண்ணீரை இடையிடையே குடித்துக்கொண்டே சாப் பாட்டை விழுங்கித் தீர்த்தான். - 'அம்மா எட்டணு வாங்கியாரச் சொல்லிச்சு."-அந்தப் பெண் அவனிடம் பணம் கேட்டாள். எதுக்குப் பணம் ? . "அது எதுக்கோ ? என்னைக் கேட்டா ?" அவன் தன் சட்டைப்பைக்குள் கையைவிட்டு எட்டணுச் சில்லறையை எடுத்துப் பாப்பாவின் கையில் கொடுத் தான். அவள் உற்சாகத்துடன் கூடையைத் துாக்கித் தலையில் வைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டாள். - கண்ணம்மா சாப்பாட்டை முடித்துக்கொண்டு மில்லில் வேலை செய்யும் தன் சிநேகிதிகளுடன் தாயம் ஆடிக் கொண்டிருந்தாள். நாராயணசாமி அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான். -