பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் - - 57 போதிய பருத்தி கிடைக்காததாலும் இரண்டு இயந் திரங்கள் உபயோகமற்றுப் போய்விட்டதாலும் நம்முடைய மில் இரண்டு வருடமாக நஷ்டத்தில் நடைபெற்று வருகிறது. நஷ்டத்தைத் தவிர்க்க வேறு வழியே இல்லாததால் கீழ்க் கண்ட 130 பேரையும் வேலையிலிருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதைக் குறித்து நான் மிகவும் வருத்தப்படு கிறேன். இதர தொழிலாளர்களின் நன்மையை உத்தே சித்து வேலை இழக்க நேரிடும் தொழிலாளர்கள் இதனை ஒரு தியாகமாக மதித்து மன அமைதி பெற வேண்டுகிறேன். மீண்டும் மில் இலாபகரமாக நடக்கத் தொடங்கியதும் வேலை இழந்தோர் அனைவருக்குமே வேலை கொடுப்பதாக உறுதி அளிக்கிறேன். அத்துடன் வேலே இழக்கும் எல்லோருக்கும் சட்டப்படி கொடுக்க வேண்டியதற்குமேல் மூன்று மாதச் சம்பளம் கொடுத்தனுப்பவும் முடிவு செய்திருக்கிறேன். சாரங்கபாணி. ’ அன்று மாலை சங்கு ஊதியதும் தொழிலாளர்கள் அனை வரும் வழக்கம்போல் ஆலையை விட்டு வெளியே செல்ல வில்லை. அந்த நோட்டீஸ் போர்டு இருந்த இடத்தில்' போய்ச் சூழ்ந்து கொண்டார்கள். - நாராயணசாமி தனக்கு வந்த அந்த நோட்டீசைப் பிரித்துப் படித்துக்கொண்டே தளர்ந்த நடையுடன் ஆலையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தான். இதற்குள் கண்ணம்மாவுக்கு விஷயம் எட்டிவிட்டது. அந்தப் பேரிடி போன்ற செய்தியைக் கேட்ட அவள் துடிதுடித்துப் போனள், சற்றுத் தொலைவில் எட்டி நின்றபடியே கசங்கிய கண்களுடன் தன் காதலன் செல்லும் திக்கையே பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். - 3. ரேடியோப் பெட்டிகளைப்போல் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்த சாரங்கா நகர் குவார்ட்டர்ஸில் சுமார் நூற்றைம்பது வீடுகள் இருந்தன.