பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருக்குறள் கதைகள் பெரும்பாலும் ஆலையைச் சேர்ந்த ஊழியர்களே அந்த வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இரண்டாவது பிளாக்கைச் சேர்ந்த முதல் தெருவில்தான் நாராயணசாமி குடியிருந் தான். அவன் வீட்டுக்கும் மில் முதலாளி சாரங்கபாணியின் பங்களாவுக்கும் அதிக தூரம் இல்லை. பங்களாவுக்கு நேர் எதிரில் அமைந்திருந்தது அவன் வீடு. நாராயணசாமி, அவனுடைய தங்கை பாப்பா, தாயார் மூவர்மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்தனர். மறைந்துபோன பாண்டுரங்கத்தின் புகைப்படம் ஒன்று. அந்த வீட்டுக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்தது. வெள்ளிக் கிழமைதோறும் பாப்பா அந்தப் படத்துக்கு மாலை தொடுத் துப் போடுவது வழக்கம். - அன்று வெள்ளிக்கிழமையானதால் பாப்பா பூ வாங்கி வரும் பொருட்டுக் கடைத்தெருவுக்குப் புறப்பட்டாள். கடைத்தெருவுக்குச் செல்ல இரண்டு வழிகள் உண்டு. மெயின் கேட் வழியாகவும் போகலாம். இன்னெரு வழி யாகவும் போகலாம். பாப்பா மெயின் கேட் வழியாகவே சென்ருள். ஏனெனில், மெயின் கேட்டுக்கருகில்தான் அவளுடைய அத்தை மகன் மில் குவார்ட்டர்ஸ் வாச்மேன் வடிவேலு நின்று கொண்டிருப்பான். - பாண்டுரங்கத்தின் சிபாரிசின் பேரில் வடிவேலுவுக்கு. அந்தக் குவார்ட்டர்ஸில் வாச்மேன் வேலை கிடைத்தது. இப்போது அவனுக்கு நாலைந்து வருட சர்விஸ் ஆகி. விட்டது. அவன் வேலைக்கு வந்து சேர்ந்த சமயம் பாப்பா பன்னிரண்டு வயதுச் சிறுமியாக இருந்தாள். . இப்போது?... . . பாவாடை சிற்ருடையாக மாறி, சிற்ருடை சேலையாகி விட்ட பருவம். அவள் பார்வை, நடை, பேச்சு எல்லாமே. அவனை மயங்கச் செய்தன. வடிவேலு பாப்பாவையே கண்கொட்டாமல் பார்த் துக்கொண்டிருந்தான். .