பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 59. வாச்மேன் ஐயா ! என்ன அப்படிப் பார்க்கிறீங்க ?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் பாப்பா. 'இல்லை, உன்னை வாச் பண்றேன்' ' என்ருன் வடிவேலு. " உனக்கு எப்போதும் குறும்புப் பேச்சுத்தான்...நான் போறேன்.' -

  • எங்கே?...”*

பூ வாங்க, இன்னேக்கு வெள்ளிக்கிழமையாச்சே. அண்ணன் வரதுக்குள்ளே அப்பாரு படத்துக்குப் பூ தொடுத் தும் போட்டு வைக்கணும்' என்ருள் அவள். பாப்பா? உனக்கு சங்கதி தெரியாதா?’’

  • * Gা ঠোঠো ?... * *

மில்லிலே நூற்றுமுப்பது பேரை வேலையிலிருந்து எடுத் துட்டாங்க." ~. என்ன? நம்ப மில்லுலேயா? இருக்காதே! முதலாளி ரொம்ப நல்லவராச்சே! வியப்பும் திகைப்பும் மேலிட்ட வளாய்க் கேட்டாள் அவள். 'நல்ல முதலாளிங்களுக்குத்தானே சோதனையெல்லாம் வந்து சேருது. மில்லிலே இரண்டு வருசமா இலட்சக்கணக் கிலே நஷ்டமாம். முதலாளி என்ன செய்வாரு ? அவர் நல்ல வர்தான். ஆனால், எத்தனை நாளைக்குத்தான் நஷ்டத்திலே நடத்துவாரு ? மறுபடியும் இலாபம் வருகிறபோது எல்லாரை யும் வேலைக்கு எடுத்துக்கிறதாக வாக்குக் கொடுத்திருக் காராம்.' . "அது சரி, நமக்குத் தெரிஞ்சவங்க யாருக்கானும் வேலை போயிடுச்சா என்ன ? அதெல்லாம் எனக்குத் தெரியாது. உங்க அண்ணன். பேருகூட அதிலே இருக்குதுன்னு கேள்வி' என்ருன் வடிவேலு. பாப்பா திடுக்கிட்டாள். .