பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருக்குறள் கதைகள் சரி: இன்று விஜயதசமி. நல்ல் நாள். உன் ப்ெய்ர் ?" தமயந்தி. பயிற்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்தன. சென்னையில் சர்வதேசச் சித்திரக் காட்சி ஒன்று நடை பெறப் போவதாகப் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளி யாயிற்று. - நண்பர்கள் பலர் ராஜுவைத் துாண்டினர்கள்; “இந்தக் காட்சியில் உன்னுடைய சித்திரமும் இடம் பெறவேண்டும். மேட்ைடுக் கலைஞர்களும் அறிஞர்களும் வந்து உன் சித்திரத்தைக் கண்டு வியக்க வேண்டும். நீ எழுதும் அந்தச் சித்திரத்தின் கீழ் நீ என்ன விலை எழுதி வைத்தாலும், அந்த விலை கொடுத்து அதை வாங்கிக் கொள்ளவும் பலர் முன் வரவேண்டும். இந்த அரிய வாய்ப்பை நீ இழந்துவிடக் கூடாது ! - ராஜு சிந்தித்தான். புகழ் பெருகும், நல்ல விலை கிடைக்கும்’ என்ற சொற்கள் அவனைத் தீவிரமாகச் சிந்திக்க வைத்தன. "" தமயந்தி ! சித்திரக் காட்சியில் நான் பங்கு கொள்வது பற்றி உன் அபிப்பிராயம் என்ன ?’ என்று கேட்டான் ராஜு. - - அவசியம் தங்கள் சித்திரம் அதில் இடம் பெற வேண்டும். இதுவே என்னுடைய விருப்பமும் என்ருள் ராஜூ யோசித்தான் ; காட்சிச் சாலையில் வைக்கக் கூடியதாக என் வசம் எந்தச் சித்திரமும் இல்லையே. - சித்திரக் காட்சியில் வைப்பதற்குரிய சித்திரம் எதுவாக இருக்கலாம் : எதை எழுதலாம் ? ஆம்! என் அருமைத் தாயாரின் உருவத்தையே எழுதி வைக்கிறேன். ராஜ தூரிகையைக் கையில் எடுத்துக் கொண்டான். அவன் இதய ஆழத்தில் பதிந்து விட்டிருந்த அன்னேயின் சோக வடிவ்த்தைக் கண் எதிரில் கொண்டு வந்தான்: பத்தே நாட்களில் அதை எழுதி முடித்துவிட்டான் அவன்.