பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் - 73 நெகிழ்ந்தார். மற்ற குடும்பங்களிலும் இப்படித்தானே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள் ? இதற்கெல்லாம் யார் காரணம் ? செய்யக்கூடாத ஒரு பெரும் குற்றத்தைத் தாம் செய்துவிட்டதாக எண்ணிக்கொண்டு தமக்குத் தாமே சங்கடப்பட்டார் அவர். பாண்டுரங்கத்தின் குடும் பத்துக்குத் தன்னல் எந்த விதத்தில் உதவ முடியும் ? அவர்கள் துன்பத்தைத் துடைக்கக்கூடிய, துயரத்தைப் போக்கக் கூடிய, வசதியும் சந்தர்ப்பமும் தமக்கு இல்லவே இல்லையா ? ஏன் இல்லை ? ஆனல் நாராயணசாமி அதற்கு ஒப்ப வேண்டுமே தன் ளிைடமிருந்து அவன் எவ்வித உதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டானே! அப்பனைப் போலவே அவனும் கண்டிப்பு மிக்கவயிைற்றே! அன்று அவன் தாயாருடன் பேசிக் கொண் டிருந்ததெல்லாம் அவர் நினைவில் பளிச்சிட்டன. நாராயணசாமி வெளியே புறப்படக் காத்திருந்தான். அவனுடைய கிழிந்துபோன சட்டையைத் தைத்துக்கொண் டிருந்தாள் பாப்பா. அப்போது, நாராயணசாமி இருக்காரா?' என்று கேட்டுக் கொண்டே வந்தான் சாரங்கபாணியின் பியூன். நாராயணசாமி வாசலுக்கு வந்து பார்த்தான். முதலாளி உங்களைக் கையோடு அழைத்து வரச் சொன்னரு என்ருன் பியூன். . . . . அவசர அவசரமாக, பாப்பா தைத்துக் கொடுத்த சட்டையை வாங்கிப் போட்டுக்கொண்டு, முதலாளி பங்களா -வுக்குப் புறப்பட்டான் நாராயணசாமி. - சாரங்கபாணி அவனை அன்போடு அழைத்துக் கனிவோடு பேசினர். - 'தம்பி, அன்றைக்கு நீயும் உன் தாயாரும் பேசிக்கிட் டிருந்ததைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். நான் உனக்கு எந்த வேலை கொடுத்தாலும் நீ அதை ஒப்புக்க மாட்டேங்